கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அனந்தா. ஜெகபதிபாபு, சுகாசினி, YG மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேனிசை தென்றல் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் சத்யா படத்தை இயக்கினார், அதன் பிறகு பாபா படத்தை இயக்கினார். தற்போது சத்ய பாபாவை பற்றி எடுத்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள். ஒரு அற்புதத்தையே படமாக எடுத்து உள்ளார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதுபோல ஒரு பெரிய முயற்சி எடுத்து செய்ய ஒரு பெரிய மனது வேண்டும். சுரேஷ் கிருஷ்ணா சார் எதை தொட்டாலும் அது அழகாக அமையும். அவரிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு அதிக முயற்சி செய்தேன். அவருடைய தீவிர ரசிகன் நான். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகை அபிராமி வெங்கடாசலம் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நிறைய லெஜன்ட் இங்கே பேசிவிட்டு சென்றுள்ளனர். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சாய் பாபா அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி உடன் உள்ளேன். எனக்கு இந்த படத்தின் வாய்ப்பு வியாழக்கிழமை தான் வந்தது. இந்த படத்தில் நான் டான்ஸ் ஆட வேண்டி இருந்தது. ஆனால் நான் கடந்த இரண்டு வருடமாக டான்ஸ் ஆடியதில்லை. இருப்பினும் அனைவரும் எனக்கு ஊக்கமளித்தனர். அனைவரிடமும் இரக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இந்த படத்தில் நிறைய பேரின் கதைகளை சொல்லி உள்ளோம். அதில் பாபாவின் பங்கும் இருக்கும். இந்த படத்திற்கு தேவா அவர்களின் பங்கு மிகப் பெரியது. வெறும் பத்து நிமிடத்தில் ஒரு பாடலை இசையமைத்து கொடுத்தார். இந்த படத்தில் ஒவ்வொரு காட்சி எடுக்கும் போதும் அதிசயத்திற்கு மேல் அதிசயம் நடந்தது. எனக்கு இந்த படத்தில் ஒரு அருமையான டீம் செட் ஆனது. அவர்கள் அனைவரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உள்ளனர். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.
பாடகர் மனோ பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நான் சிறு வயதில் சாய்பாபா நாடகத்திற்கு இரண்டு முறை சென்று உள்ளேன். பாபா அவர்கள் எனக்கு ஏதாவது கையில் கொடுக்க மாட்டாரா என்று ஆசைப்பட்ட பக்தர்களின் நானும் ஒருவன். இந்த படத்தில் எனக்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா மற்றும் தேவா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
தயாரிப்பாளர் S தாணு பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு சென்னையில் சத்ய சாய்பாபா அவர்களை பார்த்து ஆசி பெற்றேன். அவருடைய பாடல்களும் நினைவுகளும் என்றும் என் மனதில் உள்ளது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்ற சொல்லுக்கு உதாரணம் பாபா அவர்கள் தான். பல மருத்துவமனைகளையும் கல்லூரிகளையும் உருவாக்கினார். அவருடைய புகழ் உலகம் முழுவதும் இருக்க வேண்டும். சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் பாதம் தொட்டு வணங்க வேண்டும். தேவா மற்றும் பா விஜய் அவர்களின் பணி மிகச் சிறந்தது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும். கடவுள் நிச்சயம் அருள் புரிவார். பாபா அவர்களின் அன்பு உங்களை கவசம் போல் காக்கும் நன்றி.
இசையமைப்பாளர் தேவா பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாய்பாபா அவர்களுக்கு உள்ளனர். அவருடைய படத்திற்கு நான் இசையமைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பூர்வ ஜென்மத்து பாக்கியம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. ரீ ரெக்கார்டிங் பணிகளுக்காக படத்தைப் பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி உள்ளனர். அனைவரும் அற்புதமான நடிகர்கள். இந்த படத்திற்கு வியாழக்கிழமை அன்று இசைப்பணிகளை ஆரம்பித்தோம். இந்த படம் மிகப்பெரியதாக வளர்ந்ததற்கு காரணம் பாபாவின் அருள் தான். ஒவ்வொரு பாடலையும் பாடகர்கள் மிகவும் அருமையாக பாடியுள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா அவர்களுடன் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் அல்ல பாடலை சாய்பாபா அவர்களின் பக்தர்கள் அனைவரும் பாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அனைவருக்கும் நன்றி.
நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அன்பு, அகிம்சை, அமைதி போன்ற பல விஷயங்களை சொன்னவர் தான் சாய்பாபா அவர்கள். அவர் மக்களிடமிருந்து எந்த காலத்திலும் விலகி இருந்ததில்லை. மக்களோடு தான் பயணித்து இருப்பார். அவருடைய திரைப்படம் ஜெனரஞ்சகமாக இருப்பது எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா அவர்களை அனந்தா படத்திற்கு எப்படி தேர்வு செய்தார்கள் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன். இது ஒரு மிகப்பெரிய குருவைப் பற்றிய படம். யார் ஒருவர் குருவின் மீது அதிக மரியாதை வைத்துள்ளாரோ அவரை வைத்து எடுத்தால் தான் சரியாக இருக்கும். தன்னுடைய குருவான பாலச்சந்தர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டுவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. தனது குருவை அதிகமாக மதித்தார் என்பதால் தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. சுரேஷ் கிருஷ்ணா மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் சினிமாவின் சூப்பர் ஸ்டாரையும், ஆன்மீகத்தின் சூப்பர் ஸ்டாரையும் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை மிக அழகாக எடுத்துள்ளார்கள். எனக்கு வேண்டப்பட்ட அனைவரும் இந்த படத்தில் இருக்கிறார்கள். தேவாவை போன்ற இசையமைப்பாளரை நீங்கள் பார்க்கலாம், ஆனால் அவரைப் போன்ற ஒரு நல்ல உள்ளம் கொண்டவரை நீங்கள் பார்க்க முடியாது. திறமை இருந்தால் இந்த திரையுலகம் உங்களை கைவிடாது என்பதற்கு நடிகை சுகாசினி ஒரு உதாரணம். ஏற்கனவே வெற்றி என்று உறுதி செய்த படம் தான் அனந்தா. நன்றி
நடிகர்கள்
ஜெகபதி பாபு
சுஹாசினி மணிரத்னம்
Y Gee மகேந்திரன்
தலைவாசல் விஜய்
நிழல்கள் ரவி
ஸ்ரீ ரஞ்சனி
அபிராமி வெங்கடாசலம்
தொழில்நுட்பக் குழுவினர்
எழுத்து & இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பாளர்: கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி
வசனம் & பாடல்கள்: பா. விஜய்
இசை: தேவா
ஒளிப்பதிவு: சஞ்சய் BL
படத்தொகுப்பு: S. ரிச்சர்ட்
தயாரிப்பு வடிவமைப்பு: வாசுதேவன்
நடன அமைப்பு: கலா
ஆடை வடிவமைப்பு: தட்ஷா தயாள்
விளம்பர வடிவமைப்பு: டிசைன் பாயிண்ட்ஸ்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: கவின் கிருஷ்ண ராஜ், சிதம்பரம் மணிவண்ணன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்