கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற லைகா துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண விழா… திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து!

இலங்கையின் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத்தின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக மற்றும் தொழில்துறை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்த விழா, மகிழ்ச்சியான சூழலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவில், லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான ஜி.கே.எம். தமிழ்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மேலும், இயக்குநர் ஜேசன் சஞ்சய், இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன் மணிரத்னம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் தொழில்துறை பிரமுகர்கள் பலர் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமண விழா, அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழலில் நடைபெற்றதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

திரையுலகின் முக்கிய ஆளுமைகள் ஒரே மேடையில் ஒன்றுகூடி மணமக்களை வாழ்த்திய இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Comments (0)
Add Comment