ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சோனி லிவ் (Sony LIV) தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் தொகுப்பை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. சூப்பர்ஹீரோ திரைப்படங்கள், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த பிளாக்பஸ்டர்கள் மற்றும் காலத்தால் அழியாத ஹாலிவுட் கிளாசிக் படங்கள் என 150-க்கும் மேற்பட்ட பிரபல திரைப்படங்கள் இனி சோனி லிவ் தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன.
இந்த புதிய திரைப்பட வரிசையின் சிறப்பம்சமாக, ஸ்பைடர்-மேன் ரசிகர்களுக்கு நடிகர் டாம் ஹாலண்ட் ஒரு சிறப்பு வீடியோ செய்தியை பகிர்ந்துள்ளார். அடுத்த ஸ்பைடர்-மேன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இந்திய ரசிகர்களுக்கு அவர் தெரிவித்துள்ள இந்த வாழ்த்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த பிரம்மாண்ட திரைப்படத் தொகுப்பில் ஸ்பைடர்-மேன் தொடர் திரைப்படங்கள், Spider-Man: Into the Spider-Verse, ஜுமான்ஜி (Jumanji), தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் (The Pursuit of Happyness), மைக்கேல் ஜாக்சனின் This Is It, தி டா வின்சி கோட் (The Da Vinci Code), தி கராத்தே கிட் (The Karate Kid – 2010) உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.
உலக சினிமா ரசிகர்கள் விரும்பி மீண்டும் மீண்டும் ரசிக்கும் பல சிறந்த ஹாலிவுட் திரைப்படங்களை ஒரே தளத்தில் வழங்கும் முயற்சியாக இந்த விரிவாக்கத்தை சோனி லிவ் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வயதினருக்கும் ஏற்ற அதிரடி, சாகசம், உணர்வு, குடும்பம், சூப்பர்ஹீரோ மற்றும் கிளாசிக் திரைப்படங்களை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் இந்த புதிய முயற்சி, சோனி லிவ் தளத்தின் திரைப்படப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியுள்ளது. டாம் ஹாலண்ட் பகிர்ந்துள்ள சிறப்பு இன்ஸ்டாகிராம் வீடியோவும் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.