டி-சீரிஸ் வெளியிட்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடல் ‘நீ செல்’; காஜல் அகர்வாலின் உறுதியான பயணத்தை பேசும் உத்வேக கீதம்

ZEE Studios வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை முன்னணி இசை நிறுவனமான டி-சீரிஸ் (T-Series) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தளராத மன உறுதியை மையமாகக் கொண்ட இந்தப் பாடல், வெளியான தருணத்திலேயே ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

பாடகி ரிச்சா ஷர்மா மனதை வருடும் குரலில் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு மங்கேஷ் தகாடேஇசையமைத்திருக்கிறார். ஷகீல் அசாமி எழுதியுள்ள வரிகள், சவால்களை எதிர்கொண்டு முன்னேறும் மன உறுதியை அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.

காஜல் அகர்வால் நடித்துள்ள கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், எத்தனை தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் ஒரு பெண்ணின் உறுதியான பயணத்தை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது. வலிமையான காட்சிகளும், ஆழமான வரிகளும் இணைந்து, தோல்விக்குப் பிறகும் மீண்டும் எழுந்து நிற்கும் தன்னம்பிக்கையை இந்தப் பாடல் கொண்டாடுகிறது. அதனால், ‘நீ செல்’ ஒரு திரைப்படப் பாடலாக மட்டுமல்லாமல், வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கீதமாகவும் அமைந்துள்ளது.

சேட்டன் டி.கே. இயக்கத்தில், சாகர் பி. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படும் விவசாயம் மற்றும் அதன் பொதுமக்களின் உடல்நலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை மையமாகக் கொண்ட நீதிமன்ற பின்னணியிலான சமூகப் படமாக உருவாகியுள்ளது. இதில் காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயஸ் தல்பதே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் ஜூலை 24, 2026 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை வலுவான கதைக்களத்துடன் சொல்லவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் ஒளிப்பதிவை நிஷாந்த் பகவத், படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவேகவனித்துள்ளனர். இணைத் தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி, அனிதா ஜாதவ், விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

டி-சீரிஸ் இசை நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள ‘நீ செல்’ பாடல் தற்போது T-Series YouTube சேனலிலும், அனைத்து முக்கிய ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Comments (0)
Add Comment