குழந்தைகளுக்கான புதிய புராண அனிமேஷன் உலகை அறிமுகப்படுத்தும் ZEE5; ஆறு மொழிகளில் வெளியாகும் ‘Shivlok Ke Kundakka Mandakka’

குழந்தைகளுக்கான பாதுகாப்பான, தரமான மற்றும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை தொடர்ந்து வழங்கி வரும் ZEE5, தனது KidZ பிரிவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய புராண அனிமேஷன் தொடரான ‘Shivlok Ke Kundakka Mandakka’ (SKM)-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய புராண உலகை நவீன அனிமேஷன் வடிவில் குழந்தைகளுக்கு புதுமையாக அறிமுகப்படுத்தும் இந்த தொடர், ஜூலை 17 முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.

பிரபல எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதிய The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids என்ற அதிகம் விற்பனையான குழந்தைகள் நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர், குறும்புத்தனமான அசுர இரட்டையர்களான குண்டக்கா மற்றும் மண்டக்கா ஆகியோரின் சுவாரஸ்யமான சாகசங்களை மையமாகக் கொண்டுள்ளது. அவர்களின் விளையாட்டுத்தனமான செயல்கள், தைரியம், நட்பு மற்றும் சுயஅறிதல் நிறைந்த பயணத்தின் மூலம் குழந்தைகளுக்கு பொழுதுபோக்குடன் வாழ்க்கை மதிப்புகளையும் இந்த தொடர் எடுத்துரைக்கிறது.

ராமாயணம், மகாபாரதம் போன்ற அனைவரும் அறிந்த புராணக் கதைகளுக்கு அப்பால், இந்திய புராணங்களில் இதுவரை அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்கள், மாயாஜால உலகங்கள் மற்றும் புதிய சாகசங்களை இத்தொடர் அறிமுகப்படுத்துகிறது. நகைச்சுவை, அதிரடி மற்றும் வண்ணமயமான அனிமேஷன் காட்சிகளுடன், இன்றைய தலைமுறை குழந்தைகள் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் புராணங்களை புதிய கோணத்தில் சொல்லும் முயற்சியாக இது உருவாகியுள்ளது.

மேலும், விளையாட்டுத்தனமான குழந்தைகளுக்கு மதிப்புகளோ ஒழுக்கமோ இருக்காது என்ற பொதுவான கருத்தை மாற்றும் வகையில், குறும்பும் ஆர்வமும் கருணை, தைரியம், பொறுப்பு மற்றும் பரிவு போன்ற உயரிய பண்புகளுடன் இணைந்து இருக்க முடியும் என்ற செய்தியையும் இந்த தொடர் வலியுறுத்துகிறது. இது எதிர்காலத்தில் விரிவடையவிருக்கும் ஒரு பெரிய புராண அனிமேஷன் பிரபஞ்சத்தின் முதல் படைப்பாகவும் அமைகிறது.

இந்த அறிமுகம் குறித்து KidZ, ZEE5-ன் Business Head சந்தன் கந்தேல்வால் கூறுகையில், “தலைமுறைகளைத் தாண்டி மக்களால் நேசிக்கப்பட்ட கதைகளை இன்றைய குழந்தைகளுக்கேற்ற வடிவில் வழங்குவதே எங்கள் நோக்கம். ஆனந்த் நீலகண்டன் போன்ற சிறந்த கதைசொல்லிகளுடன் இணைந்து, இந்திய புராணங்களின் செழுமையை உயர்தர அனிமேஷன் மற்றும் சமகால கதை சொல்லல் மூலம் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சிதான் ‘Shivlok Ke Kundakka Mandakka’. இந்தியாவின் சொந்த கதாபாத்திரங்களை உலகத் தரத்தில் உருவாக்குவதே KidZ-ன் அடுத்த கட்ட இலக்காகும்” என்றார்.

இந்தத் தழுவல் குறித்து எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் கூறுகையில், “என்னுடைய குழந்தைகள் நூல் அனிமேஷன் தொடராக புதிய தலைமுறையினரிடம் செல்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய புராணங்களின் செழுமையான உலகத்தை குழந்தைகளுக்கு சுவாரஸ்யமான முறையில் அறிமுகப்படுத்தும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நான் உருவாக்கிய குண்டக்கா, மண்டக்கா கதாபாத்திரங்களை குழந்தைகள் திரையிலும் அதே உற்சாகத்துடன் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய தரமான குழந்தைகள் உள்ளடக்கங்களை வழங்கும் தனது முயற்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய புராணங்களையும் நவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் புதிய முயற்சியாக ‘Shivlok Ke Kundakka Mandakka’ உருவாகியுள்ளது. குழந்தைகளுக்கு பொழுதுபோக்குடன் கலாச்சார விழிப்புணர்வையும் வாழ்க்கை மதிப்புகளையும் கொண்டு சேர்க்கும் இந்த தொடர், KidZ on ZEE5-ன் முக்கியமான புதிய படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments (0)
Add Comment