உலகம் முழுவதும் ₹55 கோடி வசூலைக் கடந்த ‘கட்டா குஸ்தி 2’… மெகா ஃபேமிலி பிளாக்பஸ்டராக கொண்டாடும் படக்குழு!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ‘கட்டா குஸ்தி 2’திரைப்படம், உலகம் முழுவதும் ₹55 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு சிறப்பு வெற்றி போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

குடும்பங்கள் ரசிக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அமோக வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்தப் படத்தை செல்லா அய்யாவு எழுதி இயக்கியுள்ளார். டாக்டர் இஷாரி கே. கணேஷ் வழங்கும் Vels Film International நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். குடும்ப உறவுகள், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் விளையாட்டு அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

உலகளவில் ₹55 கோடி வசூல் என்ற சாதனையை எட்டியுள்ள ‘கட்டா குஸ்தி 2’, இந்த ஆண்டின் வெற்றிகரமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ரசிகர்களின் பேராதரவு மற்றும் குடும்ப பார்வையாளர்களின் வரவேற்பு, படத்தின் வெற்றியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment