நாட்டில் உயர் தர மருத்துவ சேவைகளுக்காக அறியப்படும் காவேரி மருத்துவமனை குழுமம், சென்னையில் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘காவேரி 3X சென்னை’ என்ற புதிய ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பம், பல்துறை மருத்துவ நிபுணத்துவம் மற்றும் ஒரே தரநிலையிலான உயர்தர சிகிச்சை முறைகளை சென்னையில் உள்ள தனது மூன்று மருத்துவமனைகளிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய முன்னெடுப்பின் மூலம், நான்காம் தலைமுறை ரோபோட்டிக் அறுவைசிகிச்சை தொழில்நுட்பம், அனுபவமிக்க மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்துறை மருத்துவக் குழுக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, நோயாளிகளுக்கு உலகத் தரத்திலான சிகிச்சை அனுபவத்தை வழங்க காவேரி மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், உலகின் மிகவும் மேம்பட்ட ரோபோட்டிக் அறுவைசிகிச்சை தொழில்நுட்பங்களில் ஒன்றாகக் கருதப்படும் நான்காம் தலைமுறை டா வின்சி (da Vinci) ரோபோட்டிக் அறுவைசிகிச்சை அமைப்பு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், குடல்–இரைப்பை அறுவைசிகிச்சை (GI Surgery), அறுவைசிகிச்சை புற்றுநோயியல் (Surgical Oncology), சிறுநீர்பாதையியல் (Urology), மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் (Obstetrics & Gynaecology), சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக உறுப்புமாற்று அறுவைசிகிச்சை (Renal Sciences & Kidney Transplant Surgery) உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளில் ரோபோட்டிக் உதவியுடன் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், பல்வேறு சிக்கலான மருத்துவ நிலைகளுக்கும் இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக குடல் இரைப்பை புற்றுநோய்கள், பெருங்குடல் புற்றுநோய்கள், மகளிர் நோயியல் புற்றுநோய்கள், மார்பகப் புற்றுநோய்கள், சிறுநீரகப் புற்றுநோய்கள், ஃபைப்ராய்டு அறுவைசிகிச்சை, கர்ப்பப்பை நீக்கம் (Hysterectomy), கருப்பை உள்வரிச்சவ்வு (Endometriosis) சிகிச்சைகள், கருப்பை தொடர்பான பல்வேறு அறுவைசிகிச்சைகள், புரோஸ்டேட் அறுவைசிகிச்சை, சிறுநீரக அறுவைசிகிச்சை, சிறுநீரக உறுப்புமாற்று அறுவைசிகிச்சை, சிறுநீர்ப்பை சிகிச்சைகள், மறுசீரமைப்பு சிறுநீர்பாதை அறுவைசிகிச்சைகள், தைராய்டு சுரப்பி அகற்றும் அறுவைசிகிச்சை, குடலிறக்க (Hernia) சிகிச்சை, பித்தப்பை அறுவைசிகிச்சை, பெருங்குடல் அறுவைசிகிச்சை மற்றும் மேற்புற இரைப்பை–குடலியல் அறுவைசிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான மருத்துவ சிகிச்சைகளில் தனது ரோபோட்டிக் அறுவைசிகிச்சை நிபுணத்துவத்தை காவேரி மருத்துவமனை பயன்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக ரோபோட்டிக் சிறுநீரக உறுப்புமாற்று அறுவைசிகிச்சையில் காவேரி மருத்துவமனை கொண்டுள்ள நிபுணத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊடுருவல் (Minimally Invasive) அறுவைசிகிச்சை முறைகளின் எல்லைகளை விரிவுபடுத்தி, மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளுக்கும் பாதுகாப்பான, துல்லியமான மற்றும் மேம்பட்ட தீர்வுகளை வழங்கும் தனது அர்ப்பணிப்பை இந்தத் திட்டத்தின் மூலம் காவேரி மருத்துவமனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முயற்சி குறித்து காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “‘காவேரி 3X சென்னை’ திட்டத்தின் மூலம், மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பம், பல்துறை மருத்துவ நிபுணத்துவம் மற்றும் ஒரே தரநிலையிலான உயர்தர சிகிச்சை முறைகளை சென்னையில் உள்ள எங்களது மூன்று மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைத்து, முழுமையான ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சூழலை உருவாக்கியுள்ளோம். காவேரி மருத்துவமனைக்கே உரித்தான தரம் மற்றும் நிலைத்தன்மையுடன், நோயாளிகள் இனி தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே அமைந்துள்ள எங்களது மூன்று மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் உலகத் தரத்திலான ரோபோட்டிக் சிகிச்சையைப் பெற முடியும்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “மிக நேர்த்தியான சிகிச்சை, அறுவைசிகிச்சையில் புதிய உத்திகளின் பயன்பாடு மற்றும் பல்வேறு மருத்துவத் துறைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதில் பல ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை, மேம்பட்ட மருத்துவ சேவை என்பது நவீன தொழில்நுட்ப வசதிகளை மட்டும் கொண்டிருப்பதல்ல; அது நோயாளிகளின் உடல்நிலையை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறது, அவர்கள் விரைவாக குணமடைய உதவுகிறது மற்றும் சிகிச்சைக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதே உண்மையான அளவுகோல். இந்த நோக்கத்தோடு சிறப்பான மருத்துவ சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறோம். சென்னை மாநகர மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சையை எளிதில் கிடைக்கச் செய்யும் எங்களது பயணத்தில் ‘காவேரி 3X சென்னை’ திட்டம் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும்” என்று தெரிவித்தார்.
மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பம், அனுபவமிக்க பல்துறை மருத்துவக் குழுக்கள், ஒரே தரநிலையிலான சிகிச்சை வழிகாட்டுதல்கள் மற்றும் உலகத் தரத்திலான அறுவைசிகிச்சை வசதிகளை ஒருங்கிணைக்கும் ‘காவேரி 3X சென்னை’ திட்டம், சென்னையில் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சேவைகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய மருத்துவ முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. நோயாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள காவேரி மருத்துவமனையிலேயே சர்வதேச தரத்திலான ரோபோட்டிக் சிகிச்சையைப் பெறும் வாய்ப்பை இந்தத் திட்டம் உருவாக்குகிறது.