ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில், நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’திரைப்படத்தை, முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) ராசிக் அஹ்மது சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், ஜீவாவுடன் இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ்.எம் இயக்கியுள்ள இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக், பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் புரொமோ வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி விநியோக நிறுவனமான ஏஜிஎஸ் இப்படத்தை வெளியிடுவதன் மூலம், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் ரசிகர்களிடையே மேலும் அதிக கவனத்தைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment