‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற Business Excellence Awards 2026 விருது வழங்கும் விழா, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முன்னணி தொழிலதிபர்கள், வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் தங்கள் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் GKM தமிழ்குமரன், வேலம்மாள் குழுமத் தலைவர் எம்.வி.எம். வேல்மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.
விழாவில் பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஆச்சி மசாலா நிறுவனத்தின் ஐசக் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் விருது பெற்றனர்.
விருதுகளை வழங்கிய பின்னர் பேசிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் GKM தமிழ்குமரன், இதுபோன்ற விருதுகள் தொழில்முனைவோருக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், வாழ்க்கையிலும் தொழிலிலும் தொடர்ந்து உயரச் செல்லும் உத்வேகத்தை இத்தகைய அங்கீகாரங்கள் உருவாக்குகின்றன என்றும், இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, விருது பெற்ற அனைத்து தொழிலதிபர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்த GKM தமிழ்குமரன், அவர்கள் மேலும் பல வெற்றிகளைப் பெற்று சமூகத்திற்கும் தொழில்துறைக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று வாழ்த்தினார்.