அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’… மீண்டும் இணையும் பாலாஜி தரணிதரன் கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. Star Studio18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை A for Apple Studios மற்றும் Cine 1 Studios Production ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்திருப்பது ‘பத்தா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பும், பாலாஜி தரணிதரனின் வித்தியாசமான கதை சொல்லல் பாணியும் இணைவதால் இப்படம் ரசிகர்களுக்கு புதிய திரைப்பட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் மூலம் இயக்குநர் அட்லி மற்றும் விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்துள்ளனர். ஏற்கனவே ‘ஜவான்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய இந்தக் கூட்டணி, தற்போது அட்லி வழங்கும் தமிழ் திரைப்படத்தில் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. ‘ஜவான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, ‘பத்தா’ படத்தில் கதாநாயகனாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கும் இப்படத்திற்கு செல்வகுமார் SK ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஆர். கலைவாணன் கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை டி. முத்துராஜ் மேற்கொள்கிறார். அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லி – விஜய் சேதுபதி மீண்டும் இணைவு மற்றும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘பத்தா’, வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Comments (0)
Add Comment