மலையாளத்தில் வெளியாகி கவனம் பெற்ற ‘காட்டாளன்’ திரைப்படம் தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம், மலையாள பார்வையாளர்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மனோரமாமேக்ஸ், தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் சேவையை தென்னிந்திய அளவில் விரிவுபடுத்தும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
மனோரமாமேக்ஸ் தளத்தில் இதுவரை மலையாள உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மலையாள திரைப்படங்களை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், ‘காட்டாளன்’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் கன்னட மொழி வெளியீடு இந்த புதிய முயற்சியின் தொடக்கமாக அமைந்துள்ளது.
பல்வேறு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களை தங்கள் சொந்த மொழிகளில் காணும் ஆர்வம் பார்வையாளர்களிடையே அதிகரித்து வரும் நிலையில், தரமான மலையாள திரைப்படங்களை பிற தென்னிந்திய சந்தைகளுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் மனோரமாமேக்ஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், மலையாளத் திரைப்படங்களின் பிராந்திய அடையாளத்தைத் தக்கவைத்தபடியே, அவற்றை மேலும் அதிகமான பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள், வலுவான கதைக்களம், சிறப்பான நடிப்பு மற்றும் இசை ஆகிய அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘காட்டாளன்’, தென்னிந்திய ரசிகர்களை கவரும் வகையிலான ஆக்ஷன் கதையை கொண்டுள்ளது. தந்தத்தின் சட்டவிரோத வர்த்தகத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அதிகாரத்தை கைப்பற்ற முயலும் சக்திகள், பழிவாங்குதல் மற்றும் உயிர்வாழ்வதற்கான போராட்டம் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
இரக்கத்திற்கு இடமில்லாத சூழலில், அதிகாரத்திற்கான மோதல் தீவிரமடையும் நிலையில், கதாபாத்திரங்களுக்கு இடையேயான மோதல்கள் திரைப்படத்தை விறுவிறுப்பான ஆக்ஷன் பயணமாக மாற்றுகின்றன.
இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ் (பெப்பே), சுனில், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன், பால் ஜார்ஜ், ஷரீஃப் முஹமது மற்றும் ரவி பஸ்ரூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் உருவான திரைப்படம் தற்போது தமிழ் மற்றும் கன்னடத்திலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளதால், தாய்மொழியைத் தாண்டி தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்களும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை தங்களுக்கு பரிச்சயமான மொழியில் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மனோரமாமேக்ஸின் இந்த புதிய பிராந்திய விரிவாக்க முயற்சி, மலையாள சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளை தென்னிந்திய அளவில் கொண்டு சேர்ப்பதற்கான புதிய பாதையை உருவாக்கியுள்ளது. அதன் தொடக்கமாக வெளியாகியுள்ள ‘காட்டாளன்’, தற்போது மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.