சுவையும் சுவாரஸ்யமும் கலக்கும் புதிய கொண்டாட்டம்… Samantha Ruth Prabhu-வுடன் Celebrity MasterChef Tamil!

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற சமையல் நிகழ்ச்சியான MasterChef, தமிழ் மக்களின் உணர்வுகள், சுவைகள் மற்றும் சமையல் பாரம்பரியத்துடன் புதிய வடிவில் தமிழுக்கு வருகிறது. Samantha Ruth Prabhu முன்னிலையில், தமிழ் திரையுலகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் பங்கேற்கும் ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சி விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV தளங்களில் ஒளிபரப்பாகிறது.

Sony Pictures Networks India (SPNI) இன்று ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற MasterChef நிகழ்ச்சியின் தமிழ் வடிவமாக உருவாகும் இந்தப் புதிய நிகழ்ச்சி, உணவு, சுவை, உணர்வு மற்றும் கொண்டாட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. Samantha Ruth Prabhu நிகழ்ச்சியை முன்னெடுக்கிறார்.

Sony VIZHA-வின் முக்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக ‘Celebrity MasterChef Tamil’ இடம்பெறுகிறது. சமையலறைக்குள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் தமிழ் திரையுலகப் பிரபலங்கள், விதவிதமான சமையல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பிரபலங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள் ஆகியவை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக அமையும்.

மேலும், Sony LIV மற்றும் அதன் டிஜிட்டல் தளங்களில் நிகழ்ச்சியைச் சார்ந்த பிரத்யேக குறும்படங்கள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்களும் வெளியாக உள்ளன. இதன் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் சமையல் பயணம், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கேமராவுக்கு பின்னால் நடைபெறும் சுவாரஸ்யமான தருணங்களை ரசிகர்கள் காண முடியும்.

‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சி குறித்து Samantha Ruth Prabhu கூறுகையில், “இந்த நிகழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இதுவரை செய்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக Celebrity MasterChef Tamil இருக்கிறது. அதுதான் இந்த நிகழ்ச்சிக்கு ‘வேண்டாம்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு என்னை வெகுவாக ஈர்த்தது” என்றார்.

மேலும் அவர், உணவு என்பது மக்களை ஒன்றிணைத்து அழகான நினைவுகளை உருவாக்கும் அற்புதமான சக்தி கொண்டது என்றும், கேமராக்கள் வழக்கமாக காட்டாத மனிதர்களின் மற்றொரு பக்கத்தை உணவு வெளிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய Samantha, “நமக்குப் பிடித்த தமிழ் பிரபலங்கள் சமையலறைக்குள் வந்து புதிய முயற்சிகளை எடுத்து, தவறுகளைச் செய்து, தங்களையே ஆச்சரியப்படுத்தி, நாம் எதிர்பார்ப்பதைவிட அதிக ஆர்வத்துடனும் உணர்வுடனும் போட்டியிடுவதைப் பார்ப்பதற்காக நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிடும் ஆர்வம் இருந்தாலும், அதை இப்போதே அறிவித்துவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்று கூறிய Samantha, “Sony VIZHA உடன் நாங்கள் என்ன சமைத்து வைத்திருக்கிறோம் என்பதை அனைவரும் பார்ப்பதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை” என தெரிவித்தார்.

தமிழ் கலாச்சாரம், கதைகள், இசை, உணவு, திருவிழாக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள Sony VIZHA, Sony Pictures Networks India-வின் புதிய தமிழ் பொழுதுபோக்கு தளமாக அறிமுகமாகியுள்ளது. ‘விழா’ என்ற தமிழ் சொல்லின் கொண்டாட்ட உணர்வை அடிப்படையாகக் கொண்டு, பல தலைமுறை தமிழ் பார்வையாளர்களுக்காக அசல் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஃபார்மேட்கள், திரைப்படங்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க இந்தத் தளம் திட்டமிட்டுள்ளது.

‘Celebrity MasterChef Tamil’ மட்டுமின்றி ‘Tamil Idol’ உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளையும் Sony VIZHA அறிமுகப்படுத்துகிறது. தமிழ் கலாச்சாரத்துடன் தொடர்புடைய அதே நேரத்தில் புதிய தலைமுறை பார்வையாளர்களின் ரசனைக்கும் ஏற்ற வகையில் தரமான மற்றும் வித்தியாசமான பொழுதுபோக்கை வழங்கும் நோக்கில் Sony VIZHA செயல்பட உள்ளது.

முன்னதாக Culver Max Entertainment Private Limited என அறியப்பட்ட Sony Pictures Networks India Private Limited (SPNI), ஜப்பானைச் சேர்ந்த Sony Group Corporation-ன் மறைமுகமாக முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமாகும். இந்தியாவின் முன்னணி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் SPNI, SD மற்றும் HD வடிவங்களில் 29 பிரீமியம் சேனல்களை இயக்கி வருகிறது.

இதில் இந்தி General Entertainment சேனல்களான Sony Entertainment Television, Sony SAB மற்றும் Sony Pal, மராத்தி General Entertainment சேனலான Sony Marathi, பெங்காலி General Entertainment சேனலான Sony AATH மற்றும் தமிழ் General Entertainment சேனலான Sony VIZHA ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுதவிர Sony MAX, Sony MAX 1, Sony MAX 2, Sony WAH உள்ளிட்ட இந்தி திரைப்பட சேனல்கள், Sony Sports Network-ன் விளையாட்டு சேனல்கள், Sony YAY! குழந்தைகளுக்கான சேனல், Sony PIX ஆங்கில திரைப்பட சேனல் மற்றும் Sony BBC Earth ஆகியவையும் SPNI-யின் கீழ் செயல்படுகின்றன.

மேலும், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான Free Ad-Supported Streaming Television (FAST) சேனலான Sony KAL, டிஜிட்டல் பொழுதுபோக்கு OTT தளமான Sony LIV மற்றும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கான Original Content மற்றும் IP-களை உருவாக்கும் Studio NEXT ஆகியவையும் SPNI-யின் முக்கிய பிரிவுகளாக உள்ளன.

SPNI-யின் நெட்வொர்க் இந்தியாவில் 70 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைவதுடன், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது. ஊடகத் துறையிலும் அதற்கு வெளியிலும் சிறந்த பணியிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள SPNI, பல்வேறு விருதுகள் மற்றும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது.

‘Celebrity MasterChef Tamil’ விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV தளங்களில் வெளியாகவுள்ள நிலையில், தமிழ் சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் சமையலறைக்குள் களமிறங்கும் இந்தப் புதிய நிகழ்ச்சி, தமிழ் பார்வையாளர்களுக்கான முக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment