செம்பன் வினோத் ஜோஸ் – ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் ‘டிஸ்கோ’… நவம்பர் 6ல் உலகமெங்கும் ரிலீஸ்!

‘அஞ்சக்கல்லக்கோக்கன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் உல்லாஸ் செம்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டிஸ்கோ’. இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘அங்கமாலி டைரீஸ்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் மற்றும் எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் நடிகர் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணைந்துள்ளதால் ‘டிஸ்கோ’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு செம்பன் வினோத் ஜோஸ் திரைக்கதை எழுதியுள்ளார்.

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.

ஆண்டனி வர்கீஸுடன் தேவ் மோகன், லுக்மேன் அவ்ரான், அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத் ஜோஸ், சாகர் சூர்யா, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், ஃபெமினா ஜார்ஜ், கல்யாணி அணில், மீரா வாசுதேவன், காயத்ரி சுரேஷ், செந்தில் கிருஷ்ணா, மணிகண்டன் ஆச்சாரி, அப்பானி சரத், சினோஜ் வர்கீஸ் மற்றும் வினீத் தட்டில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் கருப்பு நிற உடைகளில், கைகளில் துப்பாக்கிகளுடன் அல்ட்ரா ஸ்டைலிஷ் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச ஆக்ஷன் த்ரில்லர் பாணியை நினைவூட்டும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும், படத்தின் தலைப்பு லோகோவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி வடிவிலான குறியீடு, ‘டிஸ்கோ’ ஒரு ஹை-வோல்டேஜ் ஆக்ஷன் மற்றும் கன்-ஃபைட் என்டர்டெய்னராக உருவாகி வருவதை சுட்டிக்காட்டுகிறது.

உல்லாஸ் செம்பன் இயக்கத்தில், செம்பன் வினோத் ஜோஸ் எழுத்தில், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிஸ்கோ’, அல்ட்ரா-மாஸ் ஆக்ஷன் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment