15 லட்சம் பார்வைகளை கடந்த ‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் ‘குறிஞ்சி மலை மேல’ பாடல்!

வரும் நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள தமிழ் ஃபீல் குட் ரொமான்டிக் கிளாசிக் திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் முதல் பாடலான ‘குறிஞ்சி மலை மேல’ பாடல் யூடியூபில் 15 லட்சம் பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

உற்சாகம் நிறைந்த திருமணப் பாடலாக உருவாகியுள்ள ‘குறிஞ்சி மலை மேல’ பாடலை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். கு. கார்த்திக் பாடல் வரிகளை எழுத, அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைத்துள்ளார். பாடல் வெளியானது முதல் இசை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது 15 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

பிளாக் அண்ட் ஒய்ட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’, காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்களை வித்தியாசமான முறையில் இணைத்து உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் வீஜெ மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ள இப்படம், புதுமையான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடிக்க, தீப்ஷிகா மற்றும் நக்ஷா சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வீ.ஜே. பப்பு, ஜி. எம். குமார், எல்.வி. ஆதவன், ராம்ஸ், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, ஈஸ்வர்பாபு, மஞ்சு, அட்வகேட் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக, 1983ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட காலகட்டத்தை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலகட்டத்தின் வாழ்வியல் மற்றும் சூழலை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில், கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமத்து செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தின் இசைக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பின்னணி இசைக்கான பதிவுகள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்ற லைவ் ஆர்கெஸ்ட்ரா மூலம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள Budapest Scoring Company ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் படத்தின் இசை அனுபவத்திற்கு சர்வதேச தரத்திலான இசைச் செழுமையை வழங்க படக்குழு முயற்சித்துள்ளது.

‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் மூலம் மாறா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பிரான்சிஸ் ராஜ்குமார் ஆ. ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ராம்ஜி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தீனா நடன இயக்குநராகவும், டோனி ஜே ஒலி வடிவமைப்பாளராகவும், கிஷோர் காமராஜ் SFX பணிகளையும், ஜீவரத்தினம் ஆர். VFX பணிகளையும் கவனித்துள்ளனர்.

இப்படத்தை டி. ஜூட் ஆனந்த் தயாரிக்கிறார். ராஜேஷ் ஆர்., டாக்டர் கே. எஸ். செந்தில் (சசிராம் பிக்சர்ஸ்) மற்றும் கடையநேந்தல் ஆர். ஏ. பீட்டர் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். ஹரிவர்தனி ஆடை வடிவமைப்பையும், எஸ்.பி. சுகுமார் காஸ்ட்யூமர் பணிகளையும், வேல்முருகன் மேக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

படத்தின் டப்பிங் பணிகள் ஏற்கனவே முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ‘குறிஞ்சி மலை மேல’ பாடல் 15 லட்சம் பார்வைகளை கடந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் புரமோஷனல் அப்டேட்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இசைக்கு கிடைத்து வரும் வரவேற்பும், 1983ஆம் ஆண்டின் பின்னணியில் உருவாகியுள்ள வித்தியாசமான கதைக்களமும் ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

Comments (0)
Add Comment