அரேபிய நாடுகளில் தொழில், வணிகம் மற்றும் தலைமைத்துவத் துறைகளில் சாதனை படைத்து வரும் தமிழர்களின் வெற்றிப் பயணத்தை பதிவு செய்யும் “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1” சிறப்பு நூல், துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற Sikaram 2026 நிகழ்வில் வெளியிடப்பட்டது.
லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் இந்த சிறப்புமிக்க நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். WIT அமைப்பின் ஏற்பாட்டாளர் Merlin முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், Vijayan Ayyappan நூலின் முதல் பிரதியை லீமா ரோஸிடம் வழங்கினார்.
அரேபிய நாடுகளில் தமிழர்கள் உருவாக்கியுள்ள தொழில் மற்றும் வணிக வெற்றிகளையும், அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தலைமைத்துவப் பயணத்தையும் அங்கீகரிக்கும் நோக்கில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களின் பட்டியலாக மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினருக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் அவர்களின் வெற்றிப் பயணங்களை பதிவு செய்யும் முயற்சியாகவும் இது அமைந்துள்ளது.
இந்த சிறப்புப் பதிப்பின் முதல் பிரதிகளை PSM Investment Group Chairman Habibullah, TVS Group-ன் Haider, Complyance நிறுவனத்தின் Kalaiarasan, Power Group Chairman Jahir Hussain மற்றும் Lynx International-ன் Saravan Krishnamurthy உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்த முயற்சி குறித்து WIT அமைப்பின் ஏற்பாட்டாளர் Merlin பேசுகையில், அரேபிய மண்ணில் தமிழர்கள் உருவாக்கியுள்ள வெற்றிக் கதைகளை உலகிற்கு கொண்டு செல்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார். இன்று சாதித்தவர்களை கௌரவிப்பதுடன், எதிர்காலத்தில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு அவர்களின் பயணம் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“100 Leaders. 100 Journeys. One Tamil Legacy.” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, அரேபிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இணைக்கும் ஒரு வலுவான Business & Leadership Networking Platform ஆகவும் உருவெடுக்க உள்ளது.
“Top 100 Tamil Leaders in Arabia” நூல், அரேபிய நாடுகளில் தமிழர்கள் உருவாக்கியுள்ள தொழில் மற்றும் தலைமைத்துவ சாதனைகளை ஒரே தளத்தில் பதிவு செய்யும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. எல்லைகளைக் கடந்து தமிழர்கள் உருவாக்கியுள்ள வெற்றியின் அடையாளமாக அமைந்துள்ள இந்த நூல், முதல் பதிப்பாக வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்த பதிப்புகளில் அரேபிய மண்ணில் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் மேலும் பல தமிழர்களின் வெற்றிப் பயணங்கள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரேபிய நாடுகளில் வாழும் தமிழர்களின் சாதனைகள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்டு, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட உள்ளது.