தீ – லாரா ராஜ் இணைந்த ‘வாரி வாரி’ ரீமிக்ஸ் பாடல் வெளியீடு!

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் தமிழ் பாடகி தீ (DHEE), அமெரிக்க பாப் இசைக் கலைஞரும் KATSEYE குழுவின் உறுப்பினருமான லாரா ராஜ் உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்து, பாடலாசிரியர் விவேக் வரிகளில், தீ குரலில் உருவான ‘வாரி வாரி’ தமிழ் இண்டி பாடல் சமீபத்தில் வெளியாகி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இந்தப் பாடலின் ரீமிக்ஸ் தற்போது சர்வதேச இசைக் கூட்டணியாக உருவாகியுள்ளது.

இந்த ரீமிக்ஸ் பாடலில் தீயுடன் இணைந்து லாரா ராஜ் பாடியுள்ளார். பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், 808 கிருஷ்ணா இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண் கலைஞர்களான தீ மற்றும் லாரா ராஜ் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல், தமிழ் இசையையும் சர்வதேச பாப் இசை உலகையும் இணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது. இருவரது குரல்களும் இணையும் விதம் பாடலுக்கு புதிய இசை அனுபவத்தை வழங்குகிறது.

சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்தக் கூட்டணி, தமிழ் இண்டி இசையின் எல்லைகளை விரிவுபடுத்தும் மற்றொரு முயற்சியாகவும், கலாச்சார பரிமாற்றத்தின் அடையாளமாகவும்அமைந்துள்ளது. ‘வாரி வாரி – VARI VARI’ ரீமிக்ஸ் தற்போது உலகளாவிய இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Comments (0)
Add Comment