ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன்… மிரட்டும் ‘ட்ரோன்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக்!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் என பல்வேறு கூறுகளை ஒன்றிணைத்து உருவாகி வரும் ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் உருவாகி வருகிறது.

கனவுகள் நிஜமானால்?

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் என்னவாகும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி என பல்வேறு புதிரான கதாபாத்திரங்களுடன், மர்மமான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகிற்குள் பயணிக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மிரட்டும் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் வித்தியாசமான உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

முதல் போஸ்டரில் அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு நடுவே கதாநாயகி இடம்பெற்றிருப்பது, படத்தின் மாயாஜால ஃபேண்டஸி உலகத்தை வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது போஸ்டரில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இடம்பெறுவதுடன், ட்ரோன், மர்மமான வயதான பெண் மற்றும் வித்தியாசமான சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகம் இருப்பதை உணர்த்துகிறது.

மூன்றாவது போஸ்டரில் எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்துடன் ஒரு சூனியக்காரி இடம்பெற்றுள்ளார். இது படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை மிரட்டலாக வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு மூன்று போஸ்டர்களும் மூன்று விதமான மனநிலைகளையும், கதையின் வெவ்வேறு அடுக்குகளையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடிப்பு

‘ட்ரோன்ஸ்’ படத்தில் முன்னணி நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, ‘பரிதாபங்கள்’ புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஆர்ஜே தீபக் திரையுலகில் அறிமுகமாகிறார்.

படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் மேற்கொண்டுள்ளார். ஹரி S.R. இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனித்துள்ளார். R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ரமேஷ் ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு புதிய முயற்சிகளுடன் இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘ட்ரோன்ஸ்’ படத்தின் முழு உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார்!

இதற்கிடையில், முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில், ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தை தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்ததைத் தொடர்ந்து, உடனடியாக இப்படத்தின் முழு உரிமையையும் வாங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் மீது தயாரிப்பாளர் செந்தில் வைத்துள்ள நம்பிக்கை, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘ட்ரோன்ஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் ‘ட்ரோன்ஸ்’, ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment