துருவ் விக்ரமின் மாஸ் அவதாரம்… ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக திகழும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை கவரும் வகையிலான ஸ்டைலிஷான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கிறார்.

தலைப்புடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், துருவ் விக்ரம் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். பிரவுன் நிற உடை, வித்தியாசமான ஹேர்ஸ்டைல், தீவிரமான பார்வை மற்றும் ஆக்ரோஷமான உடல்மொழி என அவரது புதிய தோற்றம் கவனம் ஈர்க்கிறது.

நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்னோக்கி நீட்டியிருக்கும் துருவ் விக்ரமின் கை மற்றும் அவரது தீவிரமான பார்வை போஸ்டருக்கு அதிரடியான தோற்றத்தை வழங்குகின்றன. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும் படத்தின் ஆக்‌ஷன் பின்னணியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இதன் மூலம் ‘ஜாக்கி’ திரைப்படம் ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதோடு, துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறது. ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார். மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் கவனிக்கிறது.

Comments (0)
Add Comment