சென்னையில் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் கூட்டம் – 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் அனைத்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுடன் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துரையாடினார். பின்னர், அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டு ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் அறிவுத்திறன் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு புத்தகக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியில் இடம்பெற்ற முதல் புத்தகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கினர்.

ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்ற இந்தக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், சமூகப் பணிகள் மற்றும் வாசிப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்வாக அமைந்தது.

Comments (0)
Add Comment