“ஒரு தலைமுறைக்கே ராமராக இருந்தவர்…” – தசரதராக அருண் கோவில்!

‘ராமாயணா’ திரைப்படத்தில் மன்னர் தசரதராக நடிக்கும் அருண் கோவிலின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ராமர் கதாபாத்திரத்துடன் பல ஆண்டுகளாக அடையாளம் காணப்படும் அருண் கோவில், தற்போது அதே காவியத்தில் ராமரின் தந்தையான தசரதர் கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக தசரதர் கதாபாத்திரம் அமைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், அயோத்தி மன்னருக்குரிய கம்பீரமான தோற்றத்தில் அருண் கோவில் காட்சியளிக்கிறார். அவரது ஆடை, அலங்காரம் மற்றும் தோற்ற வடிவமைப்பு தசரத மன்னரின் கம்பீரத்தையும் அதிகாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

முன்னதாக, இந்திய ரசிகர்களால் ராமராகப் போற்றப்பட்ட அருண் கோவில், தற்போது அதே ராமாயணக் கதையில் ராமரின் தந்தையான தசரதராக நடிப்பது இப்படத்திற்கு தனிச்சிறப்பைச் சேர்த்துள்ளது. ஒரு தலைமுறையினரின் மனதில் ராமராக பதிந்த நடிகர், தற்போது ராமாயண உலகிற்குள் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, “ஒரு தலைமுறைக்கே ராமராக இருந்தவர், தற்போது அயோத்தி மன்னர் தசரதராக அருண் கோவில் ராமாயண உலகிற்கு மீண்டும் திரும்புகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், ராக்கிங் ஸ்டார் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.

நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை ஆஸ்கர் விருது பெற்ற DNEG மற்றும் யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. பிரம்மாண்டமான தொழில்நுட்பத் தரத்தில் உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது.

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளி தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஐமேக்ஸ் திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தியாவுக்கு வெளியான சர்வதேச சந்தைகளுக்கான விநியோகத்தை சோனி பிக்சர்ஸ் மேற்கொள்கிறது. இந்தி பேசும் சந்தைக்கான விநியோகத்தை தர்மா புரொடக்‌ஷன்ஸ் மேற்கொள்ளவுள்ளது.

அருண் கோவில் ராமராக ரசிகர்களின் மனதில் பதிந்த நிலையில், தற்போது தசரதராக அவரது புதிய தோற்றம் வெளியாகியிருப்பது ‘ராமாயணா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Comments (0)
Add Comment