2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து பாராட்டி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 4×400 மீட்டர் ரிலேவில் தங்கப் பதக்கம், Mixed 4×400 மீட்டர் ரிலேவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் என வித்யா ராமராஜ் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
தனது திறமை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் சர்வதேச அரங்கில் சாதனை படைத்த வித்யா ராமராஜை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து பாராட்டியதுடன், அவரது எதிர்கால சாதனைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது Chennai District Masters Athletic Association President திரு. M. செண்பகமூர்த்தி (Red Giant Movies) மற்றும் வித்யா ராமராஜின் பயிற்சியாளர் நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு வித்யா ராமராஜின் விளையாட்டு சாதனைக்கு கிடைத்த மேலும் ஒரு முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.