இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்பு ‘ராமாயணா’ – டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று (அக்டோபர் 20) முதல் இந்தியா முழுவதும் தொடங்குகிறது. தசரா பண்டிகையை முன்னிட்டு தொடங்கும் இந்த முன்பதிவு, முக்கிய டிக்கெட் முன்பதிவுத் தளங்கள் வாயிலாக நடைபெறுகிறது. நவம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தைப் பிரம்மாண்டமான திரையில் காண விரும்பும் ரசிகர்கள், ஐமேக்ஸ் உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களிலும் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படம், இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணத்தை நவீனத் திரைப்படத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதன் மூலம் இந்திய இதிகாசத்தின் கதையையும் அதன் கற்பனை உலகத்தையும் சர்வதேச ரசிகர்களுக்கான பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவமாக வழங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘ராமாயணா’ திரைப்படத்திற்கு உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். இரு இசை மேதைகளின் கூட்டணி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஐமேக்ஸ் உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களில் வெளியாகவுள்ள இப்படம், காட்சியமைப்பு மற்றும் இசையின் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ராமாயணா’ திரைப்படம் நவம்பர் 5ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

தசரா பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Comments (0)
Add Comment