‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக, ஜூலி வைல்டு கார்டு போட்டியாளராகக் களமிறங்குகிறார். தனது உற்சாகமான குணத்தால் அறியப்படும் ஜூலி, சமையல் உலகில் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளார். கடினமான சமையல் போட்டிகள், குறைந்த நேரத்தில் உணவுகளைத் தயாரிப்பது எனத் தனது சமையல் திறமையை நிரூபிக்க அவர் களமிறங்குவதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஜூலி பேசுகையில், “என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு இன்னும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது. சமந்தாவும் இதே அழகான கட்டத்தைக் கடந்து வருகிறார் என்பதை நினைக்கும்போது, என்னுடைய உணவு ஆசைகளைப் புரிந்துகொள்ள ஒருவர் இருக்கிறார் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், அவர் நடுவர் இருக்கையில் இருப்பதால் எனக்கு எளிதாக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் இங்கே சமைக்கவும், என்னை நானே சவாலுக்கு உட்படுத்தவும், நடுவர்களை ஆச்சரியப்படுத்தவும் வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபுவுடன் சமையல் கலைஞர்கள் செஃப் வெங்கடேஷ் பட், செஃப் சாஷி செல்லையா மற்றும் செஃப் ஷ்ரேயா அட்கா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று போட்டியாளர்கள் தயாரிக்கும் உணவுகளை மதிப்பீடு செய்யவுள்ளனர். எனவே, வைல்டு கார்டு போட்டியாளராக நுழையும் ஜூலி, தனது சமையல் திறமையை நிரூபித்து போட்டியில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டிய சவாலை எதிர்கொள்ளவுள்ளார்.
தாய்மையை எதிர்நோக்கும் இருவருக்கும் இடையே அன்பான பிணைப்பு உருவாகுமா? அல்லது போட்டியாளராக ஜூலி தயாரிக்கும் உணவுகளை மதிப்பிடும்போது சமந்தா கண்டிப்பான நடுவராகச் செயல்படுவாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சமையல் சவால்கள், சுவாரஸ்யமான தருணங்கள் மற்றும் எதிர்பாராத சந்திப்புகளுடன் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியைக் காண Sony VIZHA தொலைக்காட்சி மற்றும் Sony LIV தளத்தைப் பின்தொடருங்கள்.