காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள்… பரத் – ராஜேஷ் மாதவன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் பரத், மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம், அக்டோபர் 21 அன்று பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (Twin Tower Productions) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D Chronicle Productions LLP) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உறவுகள், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது.

படத்தின் தொடக்க விழாவில் நடிகர்கள் பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இயக்குநர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

‘காதல்’, ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம் மகன்’, ‘காளிதாஸ்’ படத்தின் இரு பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அழுத்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பரத், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ந்னா தான் கேஸ் கொடு’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ராஜேஷ் மாதவன், ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அலா பொலேலோ’ பாடலில் இடம்பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றார். இருவரும் இணைந்து நடிப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகையும், தமிழில் ‘புல்லட்’ படத்தில் நடித்தவருமான சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), ‘யூத்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மீனாட்சி தினேஷ், ‘மார்கழி திங்கள்’, ‘திரௌபதி 2’ ஆகிய படங்களில் நடித்த ரக்‌ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், குணச்சித்திர நடிகை சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு S.R. சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அருள் E. சித்தார்த் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக டான் பாலா, சண்டைப் பயிற்சியாளராக தினேஷ் காசி, ஒப்பனைக் கலைஞராக மணி, ஆடை வடிவமைப்பாளராக லாவண்யா தேசிகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். விளம்பர வடிவமைப்பை தினேஷ் அசோக் கவனிக்கிறார். தயாரிப்புக் கட்டுப்பாட்டுப் பணிகளை சேது பாண்டியன் மேற்கொள்கிறார். ஆடைப் பொறுப்பில் விக்னேஷ், புகைப்படக் கலைஞராக சிவா ஆகியோர் பணியாற்றுகின்றனர். மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் கவனிக்கிறார்.

வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை, மனதை நெகிழ வைக்கும் பாசம், உறவுகளின் ஆழத்தை உணர்த்தும் உணர்ச்சிகரமான தருணங்கள் என அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகிறது. பரத், ராஜேஷ் மாதவன் உள்ளிட்ட திறமையான நட்சத்திரங்களின் கூட்டணியும், கலகலப்பான திரைக்கதையும் படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவின் அழகிய ஆலப்புழா பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ் – மலையாளத் திரையுலகக் கலைஞர்கள் இணையும் இந்தப் புதிய திரைப்படம், நகைச்சுவையும் குடும்ப உணர்வுகளும் கலந்த திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment