Zion Films மற்றும் MRP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை, Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து வழங்குகிறார். பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் பிரபுதேவா, சிம்ரன் ஆகியோருடன் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.
ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த MRP Entertainment நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக இப்படம் உருவாகிறது.
கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சேகர் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். அனுவர்தன் மற்றும் நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்புப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
மேலும், கேமரா செந்தில் விளம்பரப் புகைப்படப் பணிகளையும், மணியன் படப்பிடிப்புத் தளப் புகைப்படப் பணிகளையும் கவனிக்கின்றனர். R.J. சுரேஷ் குமார் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றுகிறார். கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பையும், சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர். சிவகாந்த் தலைமை இணை இயக்குநராகவும், தினேஷ் E. இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்கிறார். பிரசாந்த் செயல் தயாரிப்பாளராகவும், சரத் J. சாமுவேல் இணைத் தயாரிப்பாளராகவும் இடம்பெற்றுள்ளனர்.
மூணாறு மற்றும் சென்னையில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படம், தற்போது இறுதிக்கட்டப் பணிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. படத்தின் தலைப்பு வெளியாகியுள்ள நிலையில், வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.