தனி மனித உணர்வையும் தற்காப்பு சட்டத்தையும் விரிவாகப் பேசும் ‘சிவப்பு மனிதர்கள்’
BTK FILMS சார்பில் B.T அரசகுமார் M.A அவர்கள் தயாரிப்பில் அன்பு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சிவப்பு மனிதர்கள்’. சமூக கருத்து பேசும் பொழுதுபோக்கு திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, சமூகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி இந்திய திரையுலகில் இதுவரை சொல்லப்படாத சட்டத்தின் மறுபக்கத்தை சொல்லி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்த இருக்கிறது வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம்.
சீனுவாச கதிர் கலை இயக்குநராக பணியாற்ற, எம் தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.என்.ராஜ் கீர்த்தி படத்தொகுப்பு செய்ய, விஜய் மந்தாரா இசையமைத்துள்ளார், கவிஞர் விவேகா, இயக்குநர் அன்பு சரவணன் பாடல்கள் எழுத, ரவி தேவ், பவர் சிவா நடனம் அமைத்துள்ளனர். தீப்பொறி நித்யா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
’சிவப்பு மனிதர்கள்’ திரைப்படத்தில் நீதிமன்றக் காட்சி ஹைலைட்டாக இருக்கும் என்று கூறிய படக்குழுவினர், படத்தின் டப்பிங் பணிகள் நிறைவுபெற்று பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.