விக்ரம் ஓய்வு?

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் மற்றுமொரு பீரியட் படம் ‘தங்கலான்’. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இந்த வாரம் முதல் ஆரம்பமாவதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பிற்கான பயிற்சியின் போது விக்ரமிற்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவரால் அடுத்த சில நாட்களுக்கு ‘தங்கலான்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘தங்கலான்’ படத்தில் வித்தியாசமான ஒரு கேரக்டரில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. சீக்கிரம் படப்பிடிப்பை முடித்து படத்தை வெளியிட ஆர்வமாய் இருந்தார்கள். இப்போது விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு தள்ளிப் போய்விட்டதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment