நடிகர் விடிவி கணேஷ், “தூக்கத்தில் கூட எதாவது சேட்டை செய்து கொண்டே தூங்கும் ஹைப்பரான நபர்தான் சதீஷ். நடிகர் விஜய் என்றால் சதீஷ்க்கு ரொம்பவும் பிடிக்கும். நெல்சன் ஒரு டைம் சொன்னால் அதற்கு முன்பே சதீஷ் இருந்தால் விஜய் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிடுவார். அவர் செய்யும் சேஷ்டை எல்லாம் பார்த்து விஜய் சிரிப்பார். செட்டே கலகலப்பாக இருக்கும். ‘பீஸ்ட்’ படத்தில் சதீஷூடன் நான் நடித்த லிஃப்ட் சீன் தெலுங்கில் பார்த்துவிட்டு நிறைய ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். கிஸ் என்றதும் எனக்கு கிடைத்த முதல் முத்தம் தான் நியாபகம் வருகிறது. மகாபலிபுரம் கடற்கரையில் பிரெஞ்ச் பெண் ஒருவரிடம் கேட்டு வாங்கிய முத்தம். என் வாழ்க்கையில் அதை மறக்க மாட்டேன். படக்குழுவினர் எல்லோருமே ஜாலியாக வேலை பார்த்திருக்கிறார்கள். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.