உங்கள் கண்களில் நாட்டின் எதிர்காலத்தை பார்க்கிறேன். உங்கள் இதயத்தில் இருக்கும் தீ, நம் ஊருக்கு மட்டும் வெளிச்சம் கொடுக்காமல் இந்த உலகத்திற்கே ஒரு வழிகாட்டியாக மாறணும். உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு புரட்சிகளிலும் இளைஞர்கள் தான் தோளோடு தோள் நின்று இருக்கிறார்கள்.
இன்றைய இளைஞர்களின் போர்க்களமே வேறு. அது துப்பாக்கியோ. வாளோ அல்ல.. ஒரு போஸ்ட்.. ஒரு ட்வீட்.. ரீல்ஸ் இவைதான். உங்கள் கையில் இருக்கும் செல்போன் ஒரு ஒளிகாட்டி.. வழிகாட்டி.. ஒரு சில ஃபாலோயர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள். உங்கள் குரலை ஒரு நாட்டுக்காக காட்டுக்காக பயன்படுத்துங்கள். குரல் இல்லாத குழந்தைகளுக்கு குரலாக மாறுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நதிகளுக்கு பயனுள்ளவர்களாக இருங்கள்.. சோசியல் மீடியாவில் வெறுப்பைக் காட்டினால் அது ஆயிரம் மடங்கு அதிகரிக்கும். நம்பிக்கை விதைத்தால் அது ஆயிரம் மடங்கு நம்பிக்கையை கொடுக்கும்.
புதிய இளைஞர்கள், வரும் தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்று பேசினார்.