சரத் சார் என்னை கூல் செய்வார் – மமிதா பைஜூ

நடிகை மமிதா பைஜூ, ” இந்த பட வாய்ப்பு கொடுத்த என்னுடைய இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பிரதீப் ரங்கநாதனிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படத்தில் சில காட்சிகள் நடிக்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கும். அப்போது சரத் சார் என்னை கூல் செய்வார். எல்லோரும் தீபாவளிக்கு ‘டியூட்’ படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவி ஷங்கர், “இப்படி ஒரு நல்ல படத்தை கொடுத்த இயக்குநர் கீர்த்தீஸ்வரனுக்கு நன்றி. மமிதா மற்றும் சாய் அபயங்கர் எங்கள் பேனரில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. தமிழில் இது எங்களுடைய இரண்டாவது படம். 8 வயது முதல் 80 வயது வரை எல்லா வயதினரும் இந்த படத்தை பார்த்து கொண்டாடலாம். லவ், எமோஷன், ஆக்சன், செண்டிமெண்ட் என எல்லா விஷயங்களும் இந்த படத்தில் அமைந்துள்ளது” என்றனர்.

ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, “நானும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனும் ‘சூரரைப் போற்று’ படத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தோம். அந்தப் படத்தில் அவர் உதவி இயக்குநராக இருந்தபோதே அவருடைய ஆர்வம் எனக்கு தெரிந்தது. அந்தப் படம் முடிந்ததும் மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் கீர்த்தியை அறிமுகம் செய்தேன். அவர்களுக்கும் கீர்த்தி சொன்ன ‘டியூட்’ கதை உடனே பிடித்து விட்டது. ‘டிராகன்’ படத்திற்கு பிறகு பிரதீப்புடன் இணையும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் மெச்சூர்டான பிரதீப்பை நீங்கள் பார்ப்பீர்கள். மமிதாவும் பிரதீப்பும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். சரத் சார் சீனியர் நடிகர் என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் நிரூபித்துள்ளார். இந்தப் படத்திற்கு முன்பிருந்தே சாய் அபயங்களின் மெலோடி பாடல்களுக்கு நான் ரசிகன். படத்தின் தொழில் நுட்பக் குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் எனது அணியினர் அனைவருக்கும் நன்றி”.

பின்னணி பாடகர்கள் திப்பு & ஹரிணி, “இந்தத் தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விஷயம் எங்களுக்கே நடப்பது போல பெருமையாக உள்ளது. சாயின் கடின உழைப்பிற்கு இன்னும் பெரிய உயரம் செல்ல வேண்டும். இந்த வயதில் ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வேலை செய்கிறான்” என்றார்.

நடிகர் ஜிபி முத்து, “பிரதீப் ரங்கநாதனின் படங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அவரின் ‘டியூட்’ படமும் பார்க்க ஆவலுடன் உள்ளேன்” என்று வாழ்த்தினார்.

Comments (0)
Add Comment