“எந்த நாடெல்லாம் தோற்றுப் போகிறதோ அவை எல்லாம் என் தாய் நாடு”
“எங்கெல்லாம் மானுடம் காயம்படுகிறதோ அவர் எல்லாம் நம் தோழமை”
என்கிறார் மகாகவி தாந்தே .
காளமாடன் திரைப்படத்தை பார்க்கும் பொழுது நினைவுக்கு வந்தது தாந்தே வரிகள்
ஒரு திரைப்படம் எழுதும் போதே வெற்றி அடைய வேண்டும். ஆன்மா மண்டியிட வேண்டும்.பைசன் திரைப்படம் அதை வலியோடு செய்திருக்கிறது
சகப் போட்டியாளர்களை வெல்வது அவன் நோக்கம் அல்ல .பல நூற்றாண்டு பகையை அவன் வென்று இருக்கிறான்
பைசன் ஒரு தீப்பொறி .ஆனால் பெரும் எரிமலையின் வெப்பம் கொண்டிருக்கிறது.
“பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் “என பாடிய மகாகவி பாரதியின் வரிகளுக்கு தன்னை ஒப்படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் போராளியாக தன் படைப்புகளை தந்து கொண்டிருக்கும் அவருக்கு நம் வாழ்த்துக்கள்
அன்புடன்
நந்தா பெரியசாமி