‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – நல்ல மனம் கொண்ட சாதாரண மனிதனின் கதை – இயக்குநர் விஜய்

34

மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) – டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) – ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த் மேற்கொண்டிருக்கிறார். மனோகர் வர்மா சண்டை பயிற்சியையும், ருச்சி வினோத் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

திரையிசையுலகில் 25வது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காதல் ரீசெட் ரிப்பீட் படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் நடிகர் அர்ஜுன் அசோகன் பேசுகையில்,
” நான் நடிக்கும் முதல் தமிழ் படம் இது. இந்தப் படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்ததற்காக இயக்குநர் விஜய்க்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு சக நடிகர் மதும்கேஷ் உதவி செய்தார். அவருக்கு நன்றி. இணைந்து நடித்த சக கலைஞர்களுக்கு நன்றி. தமிழில் இப்படி ஒரு அறிமுகம் கிடைத்ததற்கு மிகப்பெரும் நன்றி. இந்த கதாபாத்திரம் சுவாரசியமான திருப்பங்களை கொண்டது தான். என்னால் முடிந்த அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த கேரக்டர் ரொமாண்டிக்காகவும் இருக்கும் ,காமெடியும் இருக்கும், சில நேரங்களில் வில்லனாகவும் இருக்கலாம். கதாபாத்திரத்தை முழுமையாக பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்கத்திற்கு வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு திரைப்படமும் திரையரங்கத்திற்கான திரைப்படங்கள்தான். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடலுக்கு நான் முதல் முதலாக உதட்டை அசைத்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்” என்றார்.

நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில்,
” இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் என்னவென்று சொல்ல வேண்டியதில்லை. தம்பி விஜயின் எல்லா படத்திலும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுப்பது போன்ற நல்ல கேரக்டராகத்தான் கொடுப்பார். ஒரு துளியும் கர்வம் இல்லாமல் தான் செய்யக்கூடிய வேலையை ரசித்து பணியாற்றுபவர் தம்பி விஜய்.

இந்தப் படம் என் வாழ்க்கையில் கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத ஒரு படம். நான் வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது இந்தப் படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை ஒப்பந்தம் செய்வதற்கும் முன்னரே கொடுத்து உதவினார் தம்பி விஜய்.

இந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ‘தந்தை’ என்ற ஸ்தானத்தில் இருந்து ‘தாத்தா’ என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்தேன். அப்படி இந்த படத்தில் நடித்த பிறகு என் வாழ்க்கையில் மறக்க முடியாத சுபமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது. இதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இந்த படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இயக்குநர் கணேஷ் கே பாபு பேசுகையில்,
” இந்தப் படத்தில் என் மனதிற்கு நெருக்கமான விருப்பத்திற்குரிய விஜய், ஹாரிஸ் ஜெயராஜ், மதும்கேஷ் என பலர் இருக்கிறார்கள். இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அதில் நடிகர் மதும்கேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்” என்றார்.‌

நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில்,
” இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. இயக்குநர் விஜய் படம் என்றவுடன் நடிக்க சம்மதித்தேன். இந்தப் படத்தில் குட்டியான ‘கேமியோ’ ரோலில் நடித்திருக்கிறேன். இப்படத்தின் டைட்டில் டிரெண்டியாக இருக்கிறது. டைட்டிலே கதையை சொல்கிறது. விஜய் இயக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பணியாற்றிய அனுபவம் வித்தியாசமானது. ”என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,
” விஜய் – ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் இணைந்து மீண்டும் இந்த படத்தில் பணியற்றிருக்கிறேன். இதில் பணியாற்றும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்னவென்றால் நல்ல கவித்துவமான பாடல் வரிகளை எழுத வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். விஜய் நல்லதொரு தமிழ் ரசிகர். பாடலில் கவித்துவம் இருந்தால் கொண்டாடுவார். அவருடன் இணைந்து பணியாற்றும்போது நல்லதொரு சௌகரியமான சூழலை உருவாக்கித் தருவார். இந்தப் படத்தில் நாலேகால் பாடல் எழுதி இருக்கிறேன். இந்தப் படத்தின் பாடலில் ‘உன் பார்வை..’ எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

மறதியை முன்வைத்து தமிழில் இதற்கு முன் சில படங்கள் வெளியாகி இருக்கிறது. மறதியை மையப்படுத்தி ஒரு அழகான காதல் படத்தை உருவாக்க முடியுமா..! மறதியை நகைச்சுவையாக எப்படி பார்க்கலாம்… மறதியை எமோஷனலாக எப்படி பார்க்கலாம்… பல தருணங்களில் நாம் நினைத்திருப்போம். மறதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று… இது போன்ற சூழலில் நம்மை மனிதர்களாக வைத்திருப்பது இதுபோன்ற கலை.. இது போன்ற படங்கள்.. இதுபோன்ற பாடல்கள்… தமிழ் மொழி… கவிதைகள்..இது தான். இதைத்தான் நாம் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு போக வேண்டும். இந்த துறையையும் கணினிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் சர்வதேச தரத்தில் ஒரு பிரபல பாடகரின் குரலில்.. நல்ல கவிஞர்கள் எழுதியது போன்ற பாடல்வரிகளுடன் ஒரு பாடலை உருவாக்குவதற்கு இன்று மூன்று முதல் ஐந்து நொடிகள் போதுமானதாக இருக்கிறது. அதுபோன்ற பாடல்களை நாம் பயன்படுத்த தொடங்கலாம் அதனை விற்பனையும் செய்யலாம் இதுபோன்ற காலகட்டத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலை உருவாக்குவதற்காக எடுத்துக் கொள்ளும் காலகட்டம் இருக்கிறதே.. அவருடைய உழைப்பு.. வியக்க வைக்கும்.

‘உன் பார்வை..’ பாடலை பாடகர் வினித் பாடுவதற்காக அரங்கத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து பாடுமாறு ஹாரிஸ் கேட்டுக்கொண்டார். அவர் பாடப் பாட அவரது குரலை இவர் டியூன் செய்து கொண்டிருந்தார். எந்த தருணத்தில் அவருடைய குரல் சிறப்பாக இருக்கிறது என்பதற்காக காத்திருக்கிறார். அந்தக் குரல் சரியான அளவில் பொருந்துவதற்காக காத்திருந்து அதை சிறிது சிறிதாக சேகரிக்கிறார். ‘காலம் கொஞ்சம் ஓய்வெடுக்க நானும் நீயும் அங்கே இறக்கை கொண்டு பறக்க வானம் பூமி எங்கே..’ என்ற வரிகள் வரும் இடத்தில் எல்லாம் ஒவ்வொரு வரியாக ரசித்து ரசித்து நுட்பமாக அதைப்பற்றி விவரித்து.. உருவாக்குவார். அப்படி ஒரு பாடலை ரசிப்பார். கொண்டாடுவார்.‌ பாடலை நாங்கள் பதிவு செய்வதற்கு எட்டு மணி நேரமானது.‌ இது ஆண் குரலுக்கு மட்டும். பிறகு மீண்டும் பெண் குரலுக்கு… கடினமாக இதே போல் உழைப்பார். அதன் பிறகு மீண்டும் பாடலை செதுக்குவார். இப்படி ஒரு பாடலுக்காக மாதக்கணக்கில் மனித உழைப்பை வழங்கி உருவாக்குவார். அதனால் தான் இது போன்ற பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகிறது வேகமாக கிடைக்கும் ஃபாஸ்ட்ஃபுட்டை விட அம்மா சமைக்கும் உணவில் இருக்கும் சுவை நம்முடைய உடலில் தங்கி ஆரோக்கியத்தை பாதுகாப்பது போல்.. இது போன்ற மனிதர்கள் உருவாக்கும் கலை …காலத்தை கடந்து நிற்கும்.

த்தங்கள் இரைச்சல்களாக இருப்பது தான் பாடல் என்ற சூழலில் மிகவும் மென்மையாக ஒரு குரல்… மென்மையான இசை… ஒரு பாடலை உருவாக்குவது என்பது சிறப்பு. அந்த அளவிற்கு இந்த படத்தில் பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு என்னுடைய நன்றி. இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கும் நன்றி. ” என்றார்.

நடிகை ஜியா சங்கர் பேசுகையில்,
” உணர்வுகளை வெளிப்படுத்த மொழி தடையாக இருக்காது என்பதை நம்புகிறேன். நான் இதயத்தின் அடியாழத்திலிருந்து பேசுவதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. வாழ்க்கையில் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். இயக்குநர் விஜயை சந்தித்தேன். அவர் என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த மிக சிறந்த மறக்க முடியாத அனுபவம். இது என்னுடைய கனவு. தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதும் என்னுடைய கனவு. அதை தமிழில் இருந்து தொடங்கி இருக்கிறேன்.

இயக்குநர் விஜய் மிகச் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல சிறந்த மனிதர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு கலைஞர்களையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் சௌகரியமான சூழலை உருவாக்கி தருவார். அனைவர் மீதும் அக்கறை செலுத்துவார். என் வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என் அம்மா தான். அவருக்கு அடுத்த வழிகாட்டி இயக்குநர் விஜய் தான்.

இது என்னுடைய முதல் தமிழ் படம். இயக்குநர் விஜய்- ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து அறிமுகமாகிறேன். இந்தப் படத்தில் நானும் பணியாற்றி இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாகவும், கனவு நனவானது போலும் இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்களின் மனதில் நாங்கள் இடம் பிடித்திருப்போம் என நம்புகிறேன். ” என்றார்.

நடிகர் மதும்கேஷ் பேசுகையில்,
” இங்கு கூடியிருக்கும் அனைவரது முன்னிலையிலும் நான் இந்த மேடையில் நிற்பது மறக்க முடியாத தருணங்கள். என்னுடைய எல்லா மறக்க முடியாத தருணங்களுக்கும் காரணமாக திகழும் என் பெற்றோர்களுக்கு முதலில் நன்றி .

காதல் ரீசெட் ரிப்பீட் இது ஒரு படம் மட்டுமல்ல.. எனக்கு மிகப்பெரிய பாடம். இந்த பாடத்தை எனக்கு கற்பித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இந்தப் படத்தில் சித்தார்த் எனும் கேரக்டரை என்னை நம்பி கொடுத்தீர்கள். நான் அதற்கு நான் 100 சதவீதம் நியாயம் செய்திருப்பதாக நம்புகிறேன். அதற்கு நன்றி.

இந்தப் படத்தை இதுவரை பார்த்த அனைவரும் படத்தின் விஷுவல் அனைத்தும் பெயிண்டிங் போல் இருக்கிறது என பாராட்டினார்கள். இந்தப் பாராட்டு அனைத்தும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவைத்தான் சேரும்