எழுத்துலகில் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க “மில்லியன் டாலர் பப்ளிகேஷன்” – தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன்
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற நல்ல படங்களை கொடுத்தது மட்டும் அல்லாமல் அதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு புதிய திறமைகளை அறிமுகப் படுத்திய தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தற்போது பதிப்பகம் ஒன்றை துவங்கியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை போலவே இதற்கு மில்லியன் டாலர் பப்ளிகேஷன்” என பெயரிட்டுள்ளார்.
நிறுவனர் யுவராஜ் கணேசன் இதை குறித்து கூறுகையில்,
“திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க “மில்லியன் டாலர் பப்ளிகேஷன்” தனது பயணத்தை இனிதே தொடங்குகிறது.
இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றை எதிர்காலக் காட்சி ஊடகங்களுக்கான வலுவான அடித்தளமாக மாற்றுவதுமே எங்களின் முதன்மை நோக்கம்” என்கிறார்.
நிறுவனர் திரு. யுவராஜ் கணேசன் அவர்களின் வழிகாட்டலில், இப்புதிய முன்னெடுப்பைத் திறம்பட வழிநடத்திச் செல்ல பின்வரும் நிர்வாகக் குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது:
நிர்வாகக் குழு:
பதிப்பாளர்: திரு. யுவராஜ் கணேசன்
துறைத் தலைவர்: திரு. புளியந்தோப்பு மோகன்
முதன்மைப் பொறுப்பாசிரியர்: திரு. ஷாஜன் கவிதா
தலைமை வடிவமைப்பு: திருமதி. ரேவதி
திரு. யுவராஜ் கணேசன் அவர்களின் இந்த முன்னெடுப்பிற்கு வாழ்த்துக்களும், வரவேற்ப்பும்…