பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் , ‘ஆடுகளம்’ நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம், மாதேஷ் மாணிக்கம் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் டைட்டில் டீசர்- ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆரா பத்துக்கு பத்து’ எனும் பாடல் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகி சர்வதேச ஹிட் அடித்தது. ரேடியோ, ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என எல்லாவற்றிலும் பெரிய ஹிட் அடித்த ஆரா 10/10 பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள “பப்பாளி பழமே”, “கோவிந்தம்மா” உள்ளிட்ட பாடல்களும் ஹிட் அடித்து இணையத்தை கலக்கி வருகிறது.
