பாரி இளவழகன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு… சென்னையில் அறிமுகமான ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’!

6

சென்னையில் டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரியன்சியல் செண்டர் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘டாக்டர் பி பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. டெகா இத்தாலி (DEKA Italy) நிறுவனத்தின் Motus AZ+ லேசர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, டாக்டர் பி 360 நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சரும நிபுணர் டாக்டர் பைரவி செந்தில்அறிமுகப்படுத்தினார்.

சருமத்தின் தனிப்பட்ட தன்மை மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தில், சரும மருத்துவ அணுகுமுறையுடன் சர்வதேச அளவிலான லேசர் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிமுக விழாவில் ‘ஜமா’ திரைப்படத்தின் நடிகரும் இயக்குநருமான பாரி இளவழகன் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும் நடிகர்கள் கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன், ஏஞ்சலின், பவியாத்ரிகா, ராணவ், இஸ்மத் பானு, சுமித்ரா உள்ளிட்ட பல திரையுலக மற்றும் பொழுதுபோக்குத் துறை பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாரி இளவழகன், டாக்டர் பைரவி செந்திலிடம் தான் சருமப் பராமரிப்பு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். டாக்டர் பைரவியை நீண்ட காலமாகத் தெரியும் என்றும், சரும மருத்துவத் துறையில் அவரது அணுகுமுறையும் நோயாளிகளுக்கான அர்ப்பணிப்பும் தன்னை கவர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் DEKA Italy நிறுவனத்தின் பிரதிநிதி ஃபிரான்சிஸ்கோ பாடியும் கலந்து கொண்டார். சரும மருத்துவத் துறையில் டாக்டர் பைரவி செந்தில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அவர் பாராட்டிப் பேசியதுடன், DEKA நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை டாக்டர் பி 360-ன் மருத்துவ அணுகுமுறையுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ திட்டத்தின் முக்கிய அம்சமாக Motus AZ+ லேசர் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நபரின் சருமத்தின் தன்மை, சிகிச்சையின்போது அவர்களுக்குத் தேவையான வசதி மற்றும் தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பு முறையைத் தீர்மானிப்பதே இந்த அணுகுமுறையின் நோக்கமாகும்.

இதுகுறித்து டாக்டர் பைரவி செந்தில் பேசுகையில், தொழில்நுட்பம் மட்டுமே முக்கியமானது அல்ல என்றும், ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட தேவைகளுக்கும் அவர்களின் சருமத்தின் தன்மைக்கும் ஏற்ப சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பதே முக்கியம் என்றும் தெரிவித்தார். முதலில் சருமத்தைப் புரிந்துகொண்டு, அதன் பின்னர் பொருத்தமான தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சை முறையைத் தேர்வு செய்வதே டாக்டர் பி 360-ன் அணுகுமுறை என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நடிகர் கிஷன் தாஸ், சருமப் பராமரிப்பு குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பல இளம் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றதன் மூலம் நிகழ்ச்சி மேலும் கவனம் பெற்றது.

டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரியன்சியல் செண்டர், டாக்டர் பைரவி செந்தில் அவர்களால் 2025 ஜனவரி 19அன்று தொடங்கப்பட்டது. சருமம், முடி, நலவாழ்வு மற்றும் நீண்டகால பராமரிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த முழுமையான சுகாதாரச் சூழலை உருவாக்குவதை இதன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் ஒரு பகுதியாக BeWell Medi Salon மற்றும் டாக்டர் பைரவி செந்திலின் மருத்துவ ஆலோசனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட AAVÉDERM ஸ்கின்கேர் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் பிராண்டுகளும் இடம்பெற்றுள்ளன. தொழில்முறை சலூன் பராமரிப்பு, சருமப் பராமரிப்பு மற்றும் அன்றாட சுய பராமரிப்பு ஆகியவற்றை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது.

‘டாக்டர் பி பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ அறிமுகத்தின் மூலம், மேம்பட்ட லேசர் தொழில்நுட்பம், தனிப்பட்ட சருமப் பராமரிப்பு மற்றும் நீண்டகால சரும நலவாழ்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தனது முயற்சியில் டாக்டர் பி 360 மேலும் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த அறிமுக விழா சென்னையில் கவனம் பெற்றது.