ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் எனப் பன்முகம் கொண்ட செந்தமிழன் சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது மதுரையில் நடைபெற்று வரும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் சீமான் கலந்து கொண்டு தனது காட்சிகளில் நடித்து வருகிறார். அவரது வருகையைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் சீமான் இணைந்திருப்பது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘சேயோன்’ திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து வெளியாகி வரும் புதிய அறிவிப்புகள் ‘சேயோன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. சிவகார்த்திகேயன் – சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் சீமான் இணைந்திருப்பது தற்போது படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.