சதீஷ் இயக்குநராக அடுத்தடுத்த உயரங்கள் அடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்

8

நடிகர் கவின், ” உதவி இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆக்ஷன் மாஸ்டர், தயாரிப்பாளர் ராகுல் என இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. படத்தின் முதல் சிங்கிள் பாடி தந்த அனிருத் சாருக்கும் நன்றி. ‘என்னாலே…’ பாடல் எழுதி தந்த விக்னேஷ் சிவன் அண்ணன், விஷ்ணு எடவன், அருண் ராஜா காமராஜா, வாய்ஸ் ஓவர் தந்த விஜய் சேதுபதி சார் எல்லோருக்கும் நன்றி. பிஸி ஷெட்யூல்க்கு மத்தியில் இந்த நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி வந்த விடிவி சார், ப்ரீத்திக்கு நன்றி. சதீஷ் இயக்குநராக அடுத்தடுத்த உயரங்கள் அடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஜென் இசை இந்த படத்திற்கு பெரிய பலம். அவர் அடுத்தடுத்த உயரங்கள் செல்வார். செப்டம்பர் 19 அன்று படம் ரிலீஸ் ஆகிறது. நிச்சயம் குடும்பத்தோடு நீங்கள் பார்த்து என்ஜாய் செய்யலாம்” என்றார்.

இயக்குநர் சதீஷ், ” இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு மிக்க நன்றி! ‘கிஸ்’ என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது. ஆனால், இந்த கதைக்கு ‘கிஸ்’ டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் கேட்டோம். உடனே சம்மதித்தார். அவருக்கு நன்றி! கவினின் முதல் படத்திற்கு நான் கோரியோகிராப் செய்தேன். இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அவர் ஹீரோ. இது எனக்கு பெருமையான தருணம். ப்ரீத்தி, விடிவி சார் என எல்லோரும் பெஸ்ட்டாக இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. படம் பார்த்துவிட்டு சப்போர்ட் பண்ணுங்க”.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.