தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம் “வெற்று காகிதம்”

11

மகிழ் புரொடக்சன்ஸ் சி.பியூலா தயாரிப்பில், மகிழ் குழுவினர் இயக்கத்தில் உருவாகிறது ‘வெற்று காகிதம்’.

தங்கைக்காக வாழும் அண்ணனின் கதை. இன்றைய இளைஞர்களுக்கான கதை. குடும்ப பாசம், செண்டிமெண்ட் கலந்து, ஜனரஞ்சகமாக உருவாகிறது ‘வெற்று காகிதம்’.

தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஹீரோ தக்‌ஷன் விஜய்!

தக்‌ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தை மகிழ் குழுவினர் இயக்குகின்றனர். ஒளிப்பதிவு கே.கே.சாதிக், கலை கார்த்திக், சீனு, சண்டைப் பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

சென்னை, பழனி, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் சி.பியூலா மகிழ்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘வெற்று காகிதம்’. அந்த வெற்று காகிதத்தில் இன்றைய இளைஞர்களுக்கான கதை விறுவிறுப்பாக எழுதப்பட்டு வருகிறது…