தமிழ் திரையுலகில் முக்கிய கவனம் பெற்றுள்ள சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்தின் தயாரிப்பில் புதிய கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் தயாரிக்கும் இந்தப் படத்தில், பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளது.
இந்த அறிவிப்பு நடிகர் சரத்குமாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், தயாரிப்பாளர் பி. எல். தேனப்பனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மேலும் அதிகரித்துள்ளது.
பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகவுள்ளது. பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பில் அனுபவம் பெற்ற பி. எல். தேனப்பனும் இந்தக் கூட்டணியில் இணைந்திருப்பது, படத்தின் தயாரிப்பு தரத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார். படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை ஆதிரா தில்ஜித் கவனிக்க, தமிழ் மார்க்கெட்டிங்கை சரண், தமிழ் PRO பணிகளை சதிஷ் (AIM)மேற்கொள்கின்றனர்.
மேலும், படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படத்தின் தலைப்பு தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படமாக உருவாகும் இந்த திரைப்படம், வலுவான தயாரிப்பு கூட்டணியுடன் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.