‘அன்பே டயானா’ படத்தை பார்த்து பாராட்டிய சிவகார்த்திகேயன்… படக்குழு நெகிழ்ச்சி!

17

பாரி இளவழகன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் நாளை (ஜூலை 17) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பார்த்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது படக்குழுவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

படத்தை பார்த்த பிறகு, படத்தின் கதைக்களம், உருவாக்கம் மற்றும் படக்குழுவின் முயற்சியை மனதார பாராட்டிய சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து, படக்குழு சமூக வலைதளங்களில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளது.

அந்த பதிவில், “நாங்கள் மிகவும் மதிக்கும் நடிகரிடமிருந்து இதயப்பூர்வமான பாராட்டு கிடைப்பதை விட மகிழ்ச்சியான தருணம் வேறு இல்லை. எங்களின் அன்புக்குரிய சிவகார்த்திகேயன் சார் ‘அன்பே டயானா’ திரைப்படத்தை பார்த்து மனதார பாராட்டியதற்கு நன்றி. உங்கள் ஊக்கமும் அன்பும் எங்கள் முழு குழுவிற்கும் அளவிட முடியாத உற்சாகத்தை அளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்நியோ கேஸில் கிரியேஷன்ஸ் மற்றும் Era Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், பாரி இளவழகன்ரம்யா ரங்கநாதன்சேத்தன்ரோஜா செல்வமணிபரிதாபங்கள் கோபிஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாரி இளவழகன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

வெளியீட்டுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் பாராட்டு கிடைத்திருப்பது, ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. படம் நாளை முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.