ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மல்டிலிங்குவல் உள்ளடக்கப் பட்டியலை வெளியிட்ட ZEE5 – திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், விளையாட்டு, AI, அனிமேஷன் என பிரம்மாண்ட அறிவிப்பு!
இந்தியாவின் முன்னணி உள்நாட்டு ஓடிடி தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் உள்ளடக்கப் பட்டியலை (Content Slate) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிகழ்ச்சிகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான உள்ளடக்கங்கள் என விரிவான பொழுதுபோக்கு உலகத்தை ஒரே தளத்தில் வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
இந்த புதிய உள்ளடக்கத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் தரமான கதைகளை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே ZEE5-ன் முக்கிய நோக்கமாகும். வெறும் பொழுதுபோக்கை மட்டுமல்லாமல், சமூக உரையாடல்களை உருவாக்கும், கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் மொழிகளின் எல்லைகளைத் தாண்டி பயணிக்கும் கதைகளை உருவாக்கும் முயற்சியாக இந்தப் புதிய அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சிக்காக இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் படைப்பாளர்களுடன் ZEE5 இணைந்துள்ளது. இந்தியில் Jio Studios, Maddock Films, Tips Films, Pen Studios, Reliance Entertainment, Jar Pictures உள்ளிட்ட நிறுவனங்களும், தமிழில் Passion Studios மற்றும் Vriddhi Cinemas, தெலுங்கில் Annapurna Studios, Sri Venkateswara Creations, Sitara Entertainments, மலையாளத்தில் Thespian Films, கன்னடத்தில் KVN Productions, மராத்தியில் Bahawa Entertainment, வங்காளத்தில் Acropolis Entertainment உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் புதிய படைப்புகளை வழங்குகின்றன.
தமிழ் ரசிகர்களுக்கான புதிய அறிவிப்புகள்
தமிழ் ரசிகர்களுக்காக ‘Koose Munisamy Veerappan’ மற்றும் ‘Thadayam’ தொடர்களின் புதிய பகுதிகள் வெளியாகின்றன. மேலும் ‘Ananthakaalam’ மற்றும் இந்தியாவின் முதல் சுயாதீன ராப் பேட்டில் நிகழ்ச்சியான ‘Thee Kural’ ஆகிய புதிய ஒரிஜினல்கள் அறிமுகமாகின்றன.
திரைப்பட வரிசையில் ‘Demonte Colony 3’, நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் ‘Hi!’, ‘Raawadi’ உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன.
மற்ற மொழிகளில் என்னென்ன?
இந்தியில் Kambli, The Scam: Leaked, Coffee King, Rangbaaz Season 4, Janaawar 2 உள்ளிட்ட தொடர்களும், Hai Jawani Toh Ishq Hona Hai, Bandar, Bharat Bhagya Vidhata உள்ளிட்ட திரைப்படங்களும் வெளியாகின்றன.
தெலுங்கில் Shrimathi, Objection Mylord, Jayammu Nishchayammu Ra புதிய சீசன் மற்றும் Venky Anil 5, NBK111, Vrushakarma போன்ற படங்கள் இடம்பெறுகின்றன.
கன்னடத்தில் Ayyana Mane புதிய சீசன், Bitcoin Scam, Operation Bangara, Karavali ஆகியவை வெளியாகின்றன.
மலையாளத்தில் A Queen, Malabar Cup, Kerala Underground, Balan The Boy ஆகியவை இடம்பெறுகின்றன.
மராத்தியில் Hey Kay Navin? புதிய சீசன், Aga Aai, Aaho Aai, Tumbadchi Manjula, Bhootam Bhayam ஆகியவை வெளியாகின்றன.
வங்காளத்தில் Shwetkali, Lalbazaar தொடர்களின் புதிய சீசன்களுடன் Aloor Dosh மற்றும் Priyo Bondhu ஆகிய புதிய ஒரிஜினல்களும் அறிமுகமாகின்றன.
விளையாட்டு, AI மற்றும் குழந்தைகளுக்கான புதிய உலகம்
திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுடன், FIFA®, Bundesliga, ILT Season 5 மற்றும் Tamil Nadu Kabaddiஉள்ளிட்ட நேரடி விளையாட்டு ஒளிபரப்புகளையும் ZEE5 வழங்குகிறது.
AI மற்றும் அனிமேஷன் பிரிவில் Garud – Ek Yodha Ki Gatha, Narmada Manasa Sundari, Vikram Betal, Shiv Sati – Ek Anant Prem Kahani, Param Sundari Chandrakanta, Tirupati Balaji, Ram Anjaney Yuddh, Aiyappanஉள்ளிட்ட தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.
குழந்தைகளுக்காக Shivlok Ke Kundakka Mandakka, Smart KidZ, Tales of Krishna, Bandbudh and Budbak 2.0போன்ற நிகழ்ச்சிகளும் வெளியிடப்படுகின்றன.
ZEE5 நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?
ZEE5 இந்தியாவின் வணிகத் தலைவர் தேஜ்கரண் சிங் பஜாஜ் கூறுகையில், “பொழுதுபோக்கு உலகின் மாற்றங்களை பின்பற்றுவது மட்டுமல்ல, புதிய மாற்றங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இந்தியாவின் சிறந்த படைப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர்களை ஒரே தளத்தில் இணைத்து, ஏழு மொழிகளில் தரமான பொழுதுபோக்கை வழங்கும் மிகப்பெரிய முயற்சியாக இந்த உள்ளடக்கப் பட்டியல் அமைகிறது” என்றார்.
ZEE-யின் தலைமை படைப்பு அலுவலர் ராகவேந்திர ஹுன்சூர் பேசுகையில், “அதிக எண்ணிக்கையிலான உள்ளடக்கங்களை உருவாக்குவதைவிட, மக்களின் மனதைத் தொடும் தரமான கதைகளுக்கே எங்கள் முன்னுரிமை. மொழி, வடிவம், வகை ஆகிய எல்லைகளைத் தாண்டி பயணிக்கும் சக்திவாய்ந்த கதைகளை வழங்குவதே எங்கள் இலக்கு” என்று தெரிவித்தார்.
2034 வரை FIFA கூட்டாண்மை
ZEE5, திரைப்படங்கள் மற்றும் தொடர்களைத் தாண்டி, 2034 ஆம் ஆண்டு வரை FIFA உடன் Zee Entertainment மேற்கொண்டுள்ள நீண்டகால கூட்டாண்மையின் மூலம் FIFA World Cup 2026™ மற்றும் FIFA World Cup 2030™உள்ளிட்ட முக்கிய கால்பந்து போட்டிகளின் டிஜிட்டல் ஒளிபரப்பையும் இந்தியாவில் வழங்கவுள்ளது.
ஏழு மொழிகளில் உருவாகும் தரமான திரைப்படங்கள், வெப் தொடர்கள், விளையாட்டு, AI, அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஒரே தளத்தில் வழங்கும் இந்த பிரம்மாண்ட அறிவிப்பின் மூலம், இந்தியாவின் முன்னணி பல்மொழி பொழுதுபோக்கு தளமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது ZEE5.

தமிழ் ரசிகர்களுக்கான புதிய அறிவிப்புகள்
ZEE5 நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?