தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் மக்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு புதிய பிரீமியம் பொழுதுபோக்கு சேனலான ‘Sony VIZHA’வை Sony Pictures Networks India (SPNI) அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 2026 அக்டோபர் மாதம் தொடங்க உள்ள இந்த சேனல், தமிழ் பொழுதுபோக்கு உலகில் SPNI-ன் புதிய பயணமாக அமைய உள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் இணைந்து பாடிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலின் சிறப்பு நிகழ்வுடன் Sony VIZHA-வின் பெயரும் லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டின் பெருமை, அடையாளம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தின் உணர்வையே Sony VIZHA-வின் அடிப்படை எண்ணமாக கொண்டு, தமிழக மண்ணிலிருந்து உருவாகும் கதைகளை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல SPNI திட்டமிட்டுள்ளது.
‘Vizha’ என்ற தமிழ் வார்த்தைக்கு கொண்டாட்டம் அல்லது திருவிழா என்று பொருள். தமிழ் கதைகள், திறமைகள், இசை, குடும்பம், கனவுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து, அனைத்து தலைமுறை பார்வையாளர்களுக்கும் ஒரு கொண்டாட்டமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்தப் புதிய சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மண்வாசனை, கலாச்சாரம், அன்றாட வாழ்க்கை, உறவுகள், நினைவுகள், கனவுகள் மற்றும் ஆசைகளை பிரதிபலிக்கும் கதைகள் Sony VIZHA-வில் இடம்பெற உள்ளன. அதே நேரத்தில், தரமான தயாரிப்பு, சிறந்த கலைத்திறன் மற்றும் பிரீமியம் அணுகுமுறையுடன் உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள் தமிழகத்தைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள தமிழ் பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் அமைக்கப்பட உள்ளன.
Sony VIZHA-வின் லோகோவில் பயன்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் எலக்ட்ரிக் ப்ளூ நிறங்களும் தமிழ் கலாச்சாரம் மற்றும் நவீனத்தன்மையை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் நிறம் மஞ்சள் தூள் மற்றும் சாமந்திப் பூ போன்ற தமிழ்நாட்டின் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய அம்சங்களிலிருந்து உத்வேகம் பெற்றுள்ள நிலையில், எலக்ட்ரிக் ப்ளூ நிறம் நவீனத்தன்மை, பிரீமியம் தோற்றம் மற்றும் புத்துணர்ச்சியை பிரதிபலிக்கிறது.
இதுகுறித்து Sony Pictures Networks India-வின் South Regional Chief Content Officer ராஜராமன் சுந்தரம் கூறுகையில், தமிழ் பொழுதுபோக்கு உலகில் ஒரு மனமார்ந்த பயணத்தை Sony VIZHA மூலம் தொடங்குவதாக தெரிவித்தார். வளமான படைப்பாற்றல் பாரம்பரியம், உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி மற்றும் கலாச்சாரப் பெருமை கொண்ட தமிழ் சந்தையில் அர்த்தமுள்ள படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும், தமிழ் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக உணரக்கூடிய அதே நேரத்தில் புதிய தலைமுறை பார்வையாளர்களின் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் பிரதிபலிக்கும் பிரீமியம் கதைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தில் வெளிப்படும் தமிழின் பெருமையை அனைத்து திசைகளிலும் கொண்டு செல்லும் உணர்வே Sony VIZHA-வுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய அதே நேரத்தில் உலகளாவிய பார்வையுடன் உருவாக்கப்படும் பொழுதுபோக்கு கொண்டாட்டமாக இந்த சேனல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
SPNI-ன் பிரபலமான பொழுதுபோக்கு பிராண்டுகளான ‘Kaun Banega Crorepati’, ‘Indian Idol’, ‘CID’ மற்றும் ‘Crime Patrol’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அனுபவத்தையும் படைப்பாற்றலையும் அடிப்படையாகக் கொண்டு Sony VIZHA உருவாகிறது. அதேவேளையில், தனித்துவமான தமிழ் குரல், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையம்சங்களுடன் கூடிய பிரீமியம் பொழுதுபோக்கை வழங்குவதில் Sony VIZHA கவனம் செலுத்துகிறது.
Sony VIZHA-வின் நிகழ்ச்சி பட்டியலில் Original Shows, Reality Formats, திரைப்படங்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. குறிப்பாக ‘Celebrity MasterChef Tamil’ மற்றும் ‘Tamil Idol’உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுடன், நவீன சிந்தனைகளையும் தமிழ் கலாச்சாரத்தையும் இணைக்கும் வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புதிய தலைமுறை பார்வையாளர்களுக்காக வழங்க சேனல் திட்டமிட்டுள்ளது.
Sony VIZHA-வின் முழுமையான நிகழ்ச்சி பட்டியல் மற்றும் சேனல் தொடக்கம் தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
ஜப்பானைச் சேர்ந்த Sony Group Corporation-ன் முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமான Sony Pictures Networks India (SPNI), இந்தியாவின் முன்னணி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு மொழிகள் மற்றும் பிரிவுகளில் தொலைக்காட்சி சேனல்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களை SPNI இயக்கி வருகிறது.
இந்தியாவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் SPNI-ன் சேவைகள், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கின்றன. தமிழ் பொழுதுபோக்கு துறையில் Sony VIZHA அறிமுகமாக இருப்பதன் மூலம், தமிழ் கதைகள் மற்றும் கலாச்சாரத்தை பிரீமியம் தரத்தில் உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் புதிய முயற்சியை SPNI தொடங்குகிறது.
தமிழ் கலாச்சாரம், கதைகள், இசை, குடும்பம், உணவு, திருவிழாக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கொண்டாடும் வகையில் உருவாகும் Sony VIZHA, வரும் அக்டோபரில் பார்வையாளர்களை சந்திக்க தயாராகி வருகிறது.