சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் எம். செண்பகமூர்த்தி!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் எம். செண்பகமூர்த்தி தனது பிறந்தநாளை இன்று (அக்டோபர் 27) கொண்டாடினார். இதையொட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்த அவர், அவரிடம் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார்.
இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான ஜி.கே.எம். தமிழ்குமரன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் பி. சக்திவேலன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பல்வேறு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, எம். செண்பகமூர்த்திக்குத் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற எம். செண்பகமூர்த்திக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.


