100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்த தேவி ஸ்ரீ பிரசாத்!
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் டைட்டில் பாடலை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்துள்ளார் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்.
‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வேணு எல்தண்டி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் பதிவு செய்துள்ளார். இந்தியாவின் நாட்டுப்புற இசை மரபுகளையும் பல்வேறு கலாச்சாரங்களையும் ஒரே பாடலில் இணைக்கும் இந்தப் புதிய முயற்சி, இசை ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘எல்லம்மா’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வரும் மார்ச் 5-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

