ஜி.வி. பிரகாஷ் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகும் ‘13’ ஹாரர் த்ரில்லர் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹாரர் த்ரில்லர் களத்தில் ஜி.வி. பிரகாஷ் – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவு; டிசம்பரில் திரையரங்குகளில் வெளியீடு
மெட்ராஸ் ஸ்டுடியோஸ் (Madras Studios) தயாரிப்பில் உருவாகியுள்ள ‘13’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள இப்படம், ஹாரர், த்ரில்லர் மற்றும் புலனாய்வு அம்சங்கள் கலந்த வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது.
‘டார்லிங்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷ் மீண்டும் ஹாரர் த்ரில்லர் களத்தில் நடித்துள்ள படம் என்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம், உயிரைப் பறிக்கக் காத்திருக்கும் அமானுஷ்ய சக்திகள் எனப் பதற்றம் நிறைந்த கதைக்களத்துடன் ‘13’ உருவாகியுள்ளது.
மர்மமும் அமானுஷ்யமும் கலந்த கதைக்களம்
வழக்கமான பேய்ப் படங்களிலிருந்து மாறுபட்டு, ஹாரர், த்ரில்லர் மற்றும் புலனாய்வு அம்சங்களை ஒன்றிணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் மாறுபட்ட தோற்றத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் விவேக் கே கூறுகையில், “உண்மைச் சம்பவங்களின் சாயலில், அடர்ந்த காட்டின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதைக்களம் இது. இருளுக்குள் மறைந்திருக்கும் ‘13’ என்ற எண்ணின் மர்மமும், சாத்தானின் பிடியில் சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் போராட்டமும் திரையில் ஒவ்வொரு விநாடியும் பதற்றத்தை ஏற்படுத்தும். வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரசிகர்களை உரைய வைக்க காத்திருக்கிறோம்” என்றார்.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவு
இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் ‘13’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
விவேக் கே இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன், பவ்யா திரிக்கா, ஆதித்யா கதிர், ஐஸ்வர்யா மற்றும் ஆத்யா பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏஜே பின்னணி இசையமைத்துள்ளார். சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.எஃப். காஸ்ட்ரோ படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். நாஞ்சில் பி.எஸ். ராபர்ட் கலை இயக்கத்தையும், தினேஷ் காசி மற்றும் ராம்குமார் சண்டைப் பயிற்சியையும் கவனித்துள்ளனர். ஜேசன் ஜோஸ் ஒலி வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மெக்கப் பணிகளை பி. மாரியப்பனும், ஆடை வடிவமைப்பை பி. கணேசனும் மேற்கொண்டுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தை ஜி. சங்கர் கவனித்துள்ளார். ரேகா (Raan T Art) மக்கள் தொடர்புப் பணிகளையும், சிவராம் சுரேஷ் வடிவமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து, மர்மமும் திகிலும் நிறைந்த ‘13’ திரைப்படம் டிசம்பரில் திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.