சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ‘ஜெயிலர் 2’ திரைப்பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்!

தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் – பதிலுக்கு தனது வீட்டில் தயாரித்த இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார் ரஜினிகாந்த்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைமையிலான நிர்வாகிகள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, சங்கத்தின் துணைத் தலைவர் திரு. எஸ். கமலக்கண்ணன், செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், பொருளாளர் திரு. சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் திருமதி. சுஜாதா விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சங்க நிர்வாகிகள், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, தீபாவளியை முன்னிட்டு சிறப்புப் பரிசினையும் வழங்கி மகிழ்ந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளைச் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கி, அவர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதோடு, தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த அன்பான சந்திப்பு திரையுலகில் நிலவும் நட்பையும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.