முதல் வாரம் 243 திரையரங்குகள்… இரண்டாவது வாரம் 300+ திரையரங்குகள்! குடும்ப ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிநடை போடும் ‘அப்பா குட்டி’!
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், குடும்ப ரசிகர்களின் பேராதரவுடன் இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் தொடர்ந்து வருகிறது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கியுள்ள இப்படம், கடந்த நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தமிழ்நாடு முழுவதும் முதல் வாரத்தில் 243 திரையரங்குகளில் வெளியான ‘அப்பா குட்டி’, ரசிகர்கள் மற்றும் குடும்பப் பார்வையாளர்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாவது வாரத்தில் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், பல திரையரங்குகளில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளுடன் படம் ஓடிக்கொண்டிருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தைப் போலவே குழந்தைகள், இளைஞர்கள் முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ‘அப்பா குட்டி’ அமைந்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அப்பா – மகள் இடையிலான பாசம், குடும்ப உறவுகளின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. இதனால் அனைத்து வயதினரும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதல் வாரத்தில் 243 திரையரங்குகளில் தொடங்கிய ‘அப்பா குட்டி’யின் பயணம், இரண்டாவது வாரத்தில் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளாக விரிவடைந்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளுக்கு வருகை தந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், குடும்பப் பார்வையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் படக்குழுவினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
குடும்ப ரசிகர்களின் ஆதரவுடன் இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் தொடரும் ‘அப்பா குட்டி’, தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.