ஆர்யா, கவுதம் கார்த்திக் மிஸ்டர் எக்ஸ்!

206

மனு ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டில் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த படம் எப். ஜ. ஆர் . இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரிப்பதாக அறிவித்திருந்தனர். இப்போது இந்த படத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிப்பதாக பர்ஸ்ட் லுக்குடன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு மிஸ்டட் எக்ஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆக்‌ஷன் ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.