விவகாரமாக போஸ்!

212

ரைசா வில்சனுக்கு பியர் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் கெமிஸ்ட்ரி ஒத்துப்போக, மீண்டும் அவருடன் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு மக்களிடம் சுமாரான வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, வர்மா, எப்.ஐ.ஆர், காபி வித் காதல், பொய்க்கால் குதிரை போன்ற படத்தில் நடித்தார். தற்போது, தி சேஸ், ஆலிஸ், கருங்காப்பியம், லவ், காதலிக்க யாருமில்லை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். தனது அழகால் ரசிகர்களை எப்பொழுதும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ரைசா வில்சன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பிகினி, டூ பீஸ் நீச்சல் குள வீடியோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். தற்போது , கடற்கரை மணலில் விவகாரமாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.