லெஜண்ட் நாயகி டென்ஷன்!

222

பாலிவுட் திரையுலகில் தனது கிளாமரால் கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகை ஊர்வசி ரவுடேலா. சிங் சாப் தி கிரேட் என்ற படம் மூலம் அறிமுகமான ஊர்வசி, தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, காபில், ஹேட் ஸ்டோரி 4, வெர்ஜின் பானுப்ரியா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவரது கவர்சிக்காகவே பாலிட்டில் மிகப் பெரிய ரசிகர்கள் உள்ளனர். தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் தெலுங்கில் ரிலீசான ‘வால்டர் வீரய்யா’ படத்தில் சிரஞ்சீவியுடனும் நடித்திருந்தார். அதேபோல், அகில் அகினேனி, மம்முட்டியுடன் இணைந்து ஏஜெண்ட் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஊர்வசி ரவுடேலாவை அகில் அகினேனி பாலியல் தொல்லை செய்ததாக உமைர் சந்து என்பவர் டூவிட் செய்திருந்தார். பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் குறித்து அடிக்கடி அவதூறான தகவல்களை பரப்பி வருவதே உமைர் சந்துவின் புல் டைம் வேலையே இதுதானாம். அதேபோல், ஊர்வசி ரவுடேலாவையும் பிளாஸ்டிக் பியூட்டி என குறிப்பிட்டு அவரையும் அகில் அகினேனி டார்ச்சர் செய்திருந்ததாக டூவிட் செய்திருந்தார். இதனால் கடுப்பான ஊர்வசி ரவுடேலா, உமைர் சந்துவின் டூவிட்டர் போஸ்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்திருந்தார். கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும் என டென்ஷனாக பதிவிட்டுள்ளார் ஊர்வசி ரவுடேலா.